Saturday, August 29, 2009
Sunday, August 23, 2009
Thursday, August 13, 2009
இந்தியப் பொலிசார் சட்டவிரோத கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர்
ஹ்யுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு
குற்ற ஒப்புதலைப் பெறுவதற்காக இந்தியப் பொலிசார் சித்திரவதை, தாக்குதல் மற்றும் வேறு வழிவகைகளைப் பயன்படுத்துவதாக இந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படுவது மிகக்குறைவே எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்திய பொலிஸ் படை பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பின்னர் சிறிதளவே மாற்றம் பெற்றுள்ளதாகவும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கே களங்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு இந்திய அரசாங்கம் பொலிஸ் படையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
"திருந்தாத குற்றவாளிகளை கையாள வேறு வழியில்லை" - தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர்
கொடூரமான குற்றவாளிகள் மீது கருணை காட்ட முடியாது என்கிறார் தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குனர் டீ.ஜீ.பி வால்ட்டர் தேவாரம்..
Thursday, August 6, 2009
ஓகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம்
24ம் திகதி சென்னையில் தமிழர்களை பாதுகாக்கக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்!
[தமிழக நேரம் : July 20th, 2009 at 06:59]இலங்கையில் தடுப்பு முகாம்களில் உள்ள 3 இலட்சம் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் எதிர்வரும் 24ஆம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணை செயலர் மகேந்திரன், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜி லிங்கம், தேவேந்திரகுல வேளாளர் அமைப்பு தலைவர் பசுபதி பாண்டின் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில், இலங்கையில் மின்சாரவேலி தடுப்பு முகாம்களில் உள்ள 3 இலட்சம் தமிழர்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, எதிர்வரும் 24ஆம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்தி, ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனத்தை வெளியிடுவது என்றும் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முழுமையான அரசியல் தீர்வு கண்டபிறகே திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்வதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.