Friday, February 25, 2011

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!

600நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ��'ரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ��'வ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ��'ரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ��'ட்டப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக FDC- First Day Cover விற்கப்படும்.

இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ��'வ்வொரு தபால்தலை வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ, அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின் குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் ��'ன்றரை கோடி தேவேந்திரர்களின் மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.

640தற்போது முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும் காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரசும் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால் தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை, அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட ��'ரு தபால் உறையில், இமானுவேல் தபால் தலை ��'ட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும் இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில் உள்ளது.

861மற்றும் ��'வ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.

811அப்படியானால் திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?

இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில் சொன்னால் ��'ரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி, ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் ��'ரு வரலாற்று தவறு செய்திருக்கிறது.

இமானுவேல் சேகரனாரின் தபால் தலை வெளியிடப்பட வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் தேவேந்திரர்கள் கலைஞருக்கு எதிராக ��'ன்றுதிரண்டார்கள் என்ற காரணத்திற்காகவே இது நடந்திருக்கக் கூடும்.

4201. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது.

2. உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களை அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தேவேந்திரர்கள் ��'ன்று திரண்டு போராடியது

3. மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்று பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தது போன்ற காரணங்களை வைத்து எப்படியும் தேவேந்திரர்கள், வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்தே கலைஞர் இந்த தேவேந்திரர் விரோதச் செயலலை செய்திருக்கிறார்.

துரோகத்தின் விளைநிலம் கருணாநிதிக்கும், துணை நின்ற காங்கிரசுக்கும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு இதைவிட மிகப்பெரிய காரணம் தேவையில்லை. சிந்திப்பீர் தேவேந்திரர்களே!

Saturday, February 12, 2011

பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ் க்கான‌ க‌லைமாம‌ணி விருது வழங்கப்படுகிறது

பேராசிரியர் தே. ஞானசேகரன் க்கு- இயற்றமிழ் க்கான‌ க‌லைமாம‌ணி விருது வழங்கப்படுகிறது. நூலாசிரியர் முனைவர் தே. ஞானசேகரன் அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.
தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர், மள்ளரியத் தத்துவவியலாளர். சுமார் 12 கதைகளைத் தொகுத்துத் (மள்ளர் சமூக வரலாறு) தந்திருக்கிறார்.
அவர்கள் செல்பேசி : 94861 28857
விருது வ‌ழ‌ங்கும் இட‌ம்
13-02-2011 - 3.30PM
வள்ளுவ‌ர் கோட்ட‌ம், நூங்க‌ம்பாக்க‌ம் , சென்னை
கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.இது கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் இலக்கியம்,இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்களுக்கு வழங்கப்படுகிறது.இதற்கான அரசு விழாவொன்றில் தமிழக முதல்வர் கலைஞர்களை பாராட்டி விருதுகளை வழங்குவார்
2010 ஆண்டு விருது பெற்றவர்கள்


1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ் 2. பேராசிரியர் தே. ஞானசேகரன் - இயற்றமிழ் 3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ் 4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ் 5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர் 6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர் 7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர் 8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர் 9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர் 10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர் 11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர் 12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர் 13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர் 14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர் 15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல் 17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர் 18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி 19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர் 20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர் 21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம் 22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர் 23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர் 24. ஆர்யா - திரைப்பட நடிகர் 25. அனுஷ்கா - திரைப்பட நடிகை 26. தமன்னா - திரைப்பட நடிகை

"THINK BEFORE YOU PRINT" "SAVE TREES, SAVE WORLD, SAVE MANKIND"

Regards
DEVENDRAR YOUTH WELFARE ASSOCIATION (DYWA).