Tuesday, September 9, 2014

மள்ளர் மீட்பு களம்

மள்ளர் மீட்பு களம் எங்களை ஆதிதிராவிடர் என்று இழிவுபடுத்தாதே என்று சுவரொட்டி ஒட்டுகிறது.... அதனை ''ஆதி திராவிடர்கள் இழிவானவர்கள்'' என்று அவர்கள் சொல்கிறார்கள் என்று கூறி மள்ளர்களையும், பறையர்களையும் மோதவிடுகிறது திராவிடம்.
இதுதான் காலம்காலமான சாதிய சண்டை மூட்டிவிடும் திராவிட டெக்னிக்.
## எங்களுக்கு தமிழன் என்ற வரலாற்று முந்தைய காலம் தொட்ட பெயர் இருக்க சமஸ்கிருதம் கலந்து திரிந்த 'திராவிடன்' என்ற பெயரை சுமக்க சொல்லி வற்புறுத்த நீங்கள் யாராடா திராவிட‌ மொன்னைகளா??? எங்கள் இனப்பெயரை திரித்து அழைத்தால் எங்களுக்கு இழிவுதான்டா திராவிட மொன்னைகளா?

காங்கிரஸ் -பார்வர்டு பிளாக் - திராவிட கட்சிகள்

காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காக முத்துராமலிங்க தேவர் "பார்வர்டு பிளாக் " கட்சியை தமிழகத்தில் வளர்த்த போது உண்மையில் ஆரம்பத்தில் அவருக்கு மறவர்களை விட முதுகுளத்தூர் சுற்று வட்டார குடும்பமார்களே (பள்ளர்கள்) ஆதரவாக இருந்தனர்...
அன்றைய கால கட்டத்தில் மறவர்கள் எல்லாம் சேதுபதி ஜமீன் பின்னாலேயே இருந்தனர்!!!
பின் நாட்களில் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்க தேவர் நடத்திய தீவீர போராட்டங்கள் காரணமாக மறவர்களும், கள்ளர்களும் பார்வார்டு பிளாக் கட்சியை நோக்கி நகர்ந்து முத்துராமலிங்க தேவர் தலைமையில் ஒருங்கினைந்தாலும்,
அப்போதும் அக்கட்சியில் பெரும் செல்வாக்குடன் இருந்தவர்கள் முதுகுளத்தூர் பகுதி குடும்பமார்களே!!!
முத்துராமலிங்க தேவரின் வலதுகரமாக இருந்த சோலை குடும்பன் மற்றும் வேலு குடும்பன் பெயரை சொன்னாலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அஞ்சி நடுங்கும் அளவிற்கு,
மறவர்களும், பள்ளர்களும் ஒருங்கினைந்தே பார்வார்டு பிளாக் கட்சியை வளர்த்துள்ளனர் என்பதே வரலாற்று உண்மை!!!
காங்கிரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற அடிப்படையில்,
பார்வர்டு பிளாக் கட்சியிர் செய்த அனைத்து அடக்குமுறைகளுக்காக அரசு போட்ட வழக்குகள் அனைத்திலும்,
முத்துராமலிங்க தேவருக்கு அடுத்த பெயர்களாக சோலை குடும்பன் பெயரோ அல்லது வேலு குடும்பன் பெயரோ தான் உள்ளது!!!
அதாவது,
அன்றைக்கு பார்வர்டு பிளாக் கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் இருந்த அனைவரையும் சோலை குடும்பனும், வேலு குடும்பனுமே அச்சுருத்தி அடக்கியுள்ளனர்!!!
இவர்களின் அச்சுருத்தலுக்கு அன்றைக்கு பார்ப்பான் தொடங்கி, முதலியார், சேர்வை, கோனார், உள்ளிட்டவர்களோடு,
அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த பள்ளர்களும் சேர்த்தே பாதிக்கபட்டுள்ளர்!!!
இந்த நிலையில் இப்படியே விட்டால் தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அரசியலே செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் தான்,
பூவைசிய இந்துரகுல சங்கத்தை நடத்திக்கொண்டிருந்த ஐயா பேரையூர் பெருமாள் பீட்டருடன் சேர்ந்து சமூக வேலைகள் செய்து கொண்டிருந்த இளைஞர் இமானுவேல் சேகரன் அவர்களின் துடிப்பான வீரத்தையும், சமூகத்தில் நிலவிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவரது போராட்டதின் தீவிரத்தையும் பார்த்த காங்கிரஸ் தலைவர்களான காமராஜரும், கக்கனும்,
பார்வர்டு பிளாக் கட்சியின் ஆதிக்கத்தை முடக்குவதற்கு சரியான நபர் மாவீரன் இமானுவேல் சேகரனே என்ற முடிவுடன் அவரை காங்கிரஸ் கட்சியல் சேர்க்கின்றனர்!!!
அதன் பிறகே,
அன்றைக்கு பார்வர்டு பிளாக் கட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்நத நாடார், கோனார், பள்ளர்,பிள்ளைமார் உள்ளிட்ட அனைவருக்கும் ஆதராவாக களம் காண தொடங்கினார் மாவீரன் இமானுவேல் சேகரன்!!!
இந்த முரண்பாடு வளர்ந்தே பின் நாட்களில் மாவீரனின் கொலையில் கொண்டுபோய் விட,
அதுவரை காங்கிரஸ் கட்சி Vs பார்வர்டு பிளாக் கட்சிக்குமான பிரச்சனையாக இருந்தது,
பள்ளர் Vs மறவர் மோதலாக வளர்ந்து,
இன்றைக்கு இந்தளவிற்கு ஒட்டுமொத்த தமிழித்திற்கும் பொரும் கேடாக உருமாறியுள்ளது தோழர்களே!!!
இரண்டு கட்சிகளுக்கான சண்டை எப்படி இரண்டு சமூகங்களுக்கான சிக்கலாக மாறியது???
அப்படி திட்டமிட்டு மாற்றியவர்கள் யார்???
அதில் ஆதாயமடைந்தவர்கள் யார் யார்???
அதன் பிறகு சாதி ஒழிப்பு, சமூகநீதி என்று அரசியல் பேசி அதிகாரத்திற்கு வந்தவர்கள் ஏன் இப்பிரச்சனையை தீர்க்கவில்லை???
முத்துராமலிங்க சாதி வெறியர் என்று, இமானுவேல் சேகரனை சாதி ஒழிப்பு போராளி என்று திராவிட கருத்தியலை வைத்து அதிகாரத்தை பிடித்த திராவிட கட்சிகள்,
முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு மட்டும் அபரிமிதமான முக்கியத்தும் கொடுப்பதும்,
இமானுவேல் சேகரன் விழாவை மட்டும் புறக்கனிப்பதின் காரணம் என்ன???
சாதி ஒழிப்பு அரசியல் பேசுபவர்கள்,
ஆதிக்கத்திற்கு எதிராக போராடிய ஐயா இமானுவேல் சேகரனின் வீரவணக்க நாளுக்கு அல்லவா முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்???
ஜெயலலிதாவை விடுங்கள்,
இந்த கருணாநிதி, வைகே உள்ளிட்ட திராவிட சாதி ஒழிப்பு புரட்சியாளர்கள் எல்லாம் ஏன் இதுவரை மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த போகவில்லை???
ஆனால்,
இவர்கள் பார்வையில் சாதி வெறியரான முத்துராமலிங்க தேவர் விழாவிற்கு ஆண்டுதோறும் ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் செல்வதிற்காகன பின்னனி என்ன???
பார்வர்டு கட்சியில் தன் சொந்த சாதியினரான சோலை குடும்பனே நின்றாலும்,
ஆதிக்கம் என்பது யார் செய்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அனைத்து சமுக மக்களுக்காகவும் தன் சொந்த சாதியினரையே எதிர்த்து களமாடிய மாவீரனை,
ஒட்டுமொத்த தமிழர்களின் புரட்சிக் குறியீடாக பார்க்காமல்,
அவரை தலித் தலைவர் என்று ஏதோ வந்தேறிகளின் தலைவர் என்று இந்த திராவிட, தலித்திய திருடர்கள் காட்ட முயல்வது ஏன்???
இதற்கு பின்னனியில் உள்ள சதிகளும், மோசடிகளுக்கும் யார் காரணம்???
இது போன்றா என்னற்ற கேள்விகளுக்கான பதில்களை காரண காரியத்தோடு கண்டுனர்வதில் தான்,
பள்ளர்களுக்கும், மறவர்களுக்குமான சிக்கலை மட்டுமல்ல,
ஒட்டுமொத்த தமிழினத்தின் சிக்கலையும் தீர்க்கும் வழிமுறைகளும், அதற்கான தீர்வுகளும்....
அதைவிடுத்து ஆளும் அதிகாரவர்க்கம் நாமக்குள் சண்டை மூட்டிவிடுவது கூட தெரியாமல்,
இங்கே ஆளும்வர்க்கத்தின் கையாட்களான போலி புரட்சியாளகளின் சூழ்ச்சி புரியாமல்,
பள்ளர்களும் மறவர்களும் மோதிக்கொண்டே இருந்தால்,
தமிழினத்தின் அழிவை அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது தோழர்களே!!!
முக்குலத்து நண்பர்களுக்கு நான் விடுக்கும் பகிரங்க அழைப்பு யாதெனில்,
நம் தாத்தன் பாட்டன் காலத்தில் நாம் எந்த காரணத்திற்காக சண்டையிட்டு இருந்தாலும்,
அதில் யார் பக்கம் நியாயம் இருந்திருந்தாலும்,
அதையெல்லாம் மறந்துவிட்டு இனியாவது தமிழர்களாக இனைவோம் என்பதே!!!
இல்லையென்றால்,
இந்த திராவிட வடுகர்கள் நம் பேரப்பிள்ளைகளை கூட நிம்மதியாக வாழவிட மாட்டார்கள்!!!
சிந்தித்து செயல்பட்டால் நம் அடுத்த தலைமுறை இம் மண்ணை ஆளும்!!!
இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழினமும் வீழும்!!!

சட்டமாணவி முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு எழுதும் பகிரங்கக் கடிதம்.



நமக்கு உண்மையிலே மனசாட்சி இருந்தால் இந்த பெண்ணின் மன தைரியத்தை பாராட்டி இதை அனைவரும் ஷேர் செய்து நம் உடன் பிறவா சகோதரிக்கு ஆதரவு தருவோம் !!!
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.
நாள்:06.12.2013
அனுப்புநர்
ஆ.நந்தினி,
நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல்,
அரசு சட்டக்கல்லூரி,
மதுரை-625020
பெறுநர்
செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்,
வேதி நிலையம்,
81/36 போயஸ் கார்டன்,
சென்னை-600086
தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம். மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.இதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும்
நீங்கள் இருவரும் தானே தமிழகமக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள். ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.
எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்? நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை.
இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை. சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான்.திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.
தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.மதுவிற்பனை அதிகரிக்க,அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது.நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.
பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவது?தூக்குதண்டனை கூடப் போதாது.அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.
இப்படிக்கு,
ஆ.நந்தினி.
பி.கு: TASMAC என்பதை
AMMA WINES என்று
வைத்தால் மிகவும்
பொருத்தமாக இருக்கும்.
நகல்:
1.திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர்.
2.தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள்
மற்றும் அரசு அதிகாரிகள்.
3.ஊடகங்கள்.
4.தமிழக மக்களுக்கு..
பகிர்வோம்,,! தோள் கொடுப்போம் தோழிக்கு