Tuesday, May 12, 2009

உறவுகளை நினைத்து வேதனை

http://www.worldservice.com/tamil

12 மே, 2009 - பிரசுர நேரம் 11:56 ஜிஎம்டி

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090512_diasporaanguish.shtml

உறவுகளை நினைத்து வேதனை

இலங்கையில் யுத்தப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள தமது உறவினர்களைத் தொடர்புகொள்வதில் புலம்பெயர்வாழ் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விளக்கும் பெட்டகம்.

விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொலைபேசி வசதிகளை அரசு பல மாதமாக துண்டித்து விட்டது. போர் உக்கிரமடைந்ததுவிட்டதன் காரணமாக புலிகளின் அனுசரணையுடன் நடத்தப்படும் செய்மதி தொலைபேசி வழியாக வன்னியில் இருப்பவர்கள் தமது உறவினர்களை தொடர்பு கொள்வதும் குறைந்துவிட்டது.

மற்றொறு புறம் வவூனியா முகாம்களில் இருப்பவர்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது தெரியாத நிலையும் உள்ளது.

மான்செஸ்டர் மாணவர் பத்மநாதன் வசீகரன் தனது பெற்றோர்கள் மற்றும் மனைவியின் உறவினர்கள் பற்றி தமக்கு தகவல் ஏதும் தெரியாமல் உள்ளது என்கிறார்.

லண்டனில் வசிக்கும் ஜெஸ்டினின் பல உறவினர்கள் வன்னியில் இருக்கின்றனர். இவரின் உறவினர்கள் விடுதைலப் புலிகள் அமைப்பில் இருப்பதால் அவர்கள் அரசு தரப்புக்கு வருவது கடினமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். தமது உறவினர்களை கண்டறிய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணையை நாட ஜெஸ்டின் திட்டமிட்டுள்ளார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள தாமஸ் குரூஸ், தற்போது தனது தாய் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாகவும், அவருடன் பேசி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டதாகவும் கூறினார். சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளை தனது தாய் எதிர்கொள்வதாகவும், அங்கு அவர் எப்படி வாழ்கிறார் என்பதை நினைத்து தான் கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மற்றொறு லண்டன் வாசியான தீனேஷ் சில மாதங்களுக்கு முன்பேகூட அங்குள்ள நிலை மோசமாக இருந்ததாக தமது தாய் கூறியாதாக நம்மிடம் தெரிவித்தார்.

சமீபத்தில் லண்டன் நகரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்குகொண்ட லஷ்மி ஜெயகுமார், சர்வதேச நாடுகள் அங்கு நடக்கும் போரை நிறுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். மேலும் தனது உறவினர் கொல்லப்பட்டதைக் கூட தான் ஊடகம் வழியாகவே அறந்தாகவும் அவர் கூறினார்

வவூனியா முகாம்களில் உள்ளவர்களின் வசதிக்காக தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நிவாரணக் கிராமங்களுக்கு தொலை பேசி இணைப்புகள் ஏற்கனவே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்த அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன், முகாம்கள் இருக்கும் பகுதியில் வங்கிக் கிளைகள் திறக்கும் பணியும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

வவூனியா முகாம்களுக்கு ஏராளமானோர் வந்துள்ள நிலையில் வந்தவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்

இது பற்றிய பெட்டகத்தை இன்றைய தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்

No comments: