தேவேந்திர மக்கள் தலைநிமிர வேண்டும் சிறுசேமிப்பு இயக்குநர் உமாசங்கர் பேச்சு
http://www.dinamalar.com//districtnews_detail.asp?print=1&News_id=217289&cls=row4&ncat=Tirunelveli&ncat1=GEN
திருநெல்வேலி:ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து விடுபட்டால்தான் தேவேந்திரகுல மக்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என தமிழக சிறுசேமிப்புதுறை இயக்குநர் உமாசங்கர் பேசினார்.
நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினரை ஆதிதிராவிடர் இன பட்டியலில் இருந்து நீக்கி தனிப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தும் ஆலோசனை கூட்டம் நேற்று நெல்லையில் நடந்தது. தேவேந்திர குல வேளாளர் சங்க தலைவர் பசுபதிபாண்டியன் தலைமை வகித்தார். தமிழக சிறுசேமிப்பு துறை இயக்குநரும் நெல்லையை சேர்ந்தவருமான உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.,பேசுகையில், சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் நம் இனத்தவர்கள் இன்னமும் அடிமையாகத்தான் உள்ளார்கள்.
அரசு பணிகளில் இருந்தாலும் மற்றவர்கள் அடிமையாகத்தான் பார்க்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு இனத்தவர்கள் தங்களை எஸ்.சி.,பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி போராடுகிறார்கள். இந்த பட்டியலில் இருந்தால் என்ன பாதிப்பு என்று நமக்குத்தான் தெரியும். நான் ஜாதி தலைவர்களையோ, அரசியல் தலைவர்களையோ குறைசொல்ல விரும்பவில்லை. இரண்டு கோடி பேர் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தும் ஒரு தொழிலோ, ஒரு வியாபாரமோ செய்யவில்லை.