தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் அவர் தெரிவிக்கையில், மள்ளர் இலக்கிய கழகம், மள்ளர்நாடு என்ற சமூக அமைப்பாக செயல்பட்டு வருகிறது. தேவேந்திரகுல வேளாளர் இனம் குடும்பன், காலாடி, பண்ணாடி, பள்ளன், கடையன், மள்ளர்,தேவேந்திரகுலத்தான் என,பல்வேறு பிரிவுகளாக அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த மக்களை தேவேந்திரகுல வேளாளர் இனமாக அரசு அறிவிக்கவேண்டும் என, மள்ளர் இலக்கிய கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தென் மாவட்டங்களில்,மாவட்ட தலைநகர், தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுகிறது. 19ம் நூற்றாண்டில் தான் பல்வேறு சாதிகளாக தேவேந்திரகுல இனமக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கான,வரலாற்றுச் சான்றுகள் எங்களிடம் உள்ளது. தற்போது, எங்களை பட்டியல் இனமாகத் தான் அழைக்கவேண்டும். ஆனால், அரசு ஆதிதிராவிடர்களாக அறிவித்துள்ளது.
இதனை கண்டித்து கோர்டில் வழக்குகள் தொடுத்துள்ளோம். அதுபோல், திமுக ஆட்சி அமைத்த 3 வருடங்களில் 52 தேவேந்திரகுல இனத்தினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதிகார வர்க்கத்தினால் கொலை செய்யப்பட்டு வரும் எங்கள் இன மக்களுக்கு அரசு சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். சரியான தலைவர் இல்லாததால் தான் எங்கள் இன மக்கள் பிரிந்து கிடக்கின்றனர்.இவ்வாறு சுப.அண்ணாமலை தெரிவித்தார்.
அவருடன், மாநில செய்தி தொடர்பாளர் ரத்தினமாணிக்கம், ஓருங்கிணைப்பாளர்கள் நல்லுச்சாமி, சோலைபழனிவேல்ராஜன், மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், ஓன்றிய பொறுப்பாளர்கள் ஸ்ரீவைகுண்டம் சதிஷ்குமார், ஓட்டப்பிடாரம் கருப்பசாமி, விளாத்திகுளம் சுந்தரவேல்,தூத்துக்குடி சங்கர், முத்துமுருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.http://www.tutyonline.com/news/view/1/1621/1248477240.shtml
No comments:
Post a Comment