மதுரை, பிப். 6-
உலக செம்மொழி மாநாட்டில் தேவேந்திர குல வேளாளர்களின் வரலாற்றை வெளியிட வேண்டும் என்று மள்ளர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மள்ளர் இலக்கிய கழக தலைவர் சுப.அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற மார்ச் மாதம் கோவையில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக அரசு தேவேந்திர குல வேளாளர் களின் உண்மை வரலாற்றை வெளியிட வேண்டும்.
இது தொடர்பான ஆய்வு கட்டுரைகள், ஆவணங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேவேந்திர குல வேளாளர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவது முதல்- அமைச்சர் கருணாநிதியின் கலை தொண்டாகும்.
அப்படி மாநாட்டில் வெளியிடாவிட்டால் தேவேந்திர குல வேளாளர் கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம்.
மதுரை அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் மள்ளர்களின் விவசாய நிலம் 400 ஏக்கர் முறைகேடாக கையகப்படுத்தப்பட உள்ளது.
இதைக்கண்டித்து வருகிற 10-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும் மதுரையில் வருகிற மே மாதம் 15-ந்தேதி தேவேந்திர குல ஒற்றுமை மாநாடு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொருளாளர் கோவை பழனி வேல்ராஜன் உடன் இருந்தார்.
No comments:
Post a Comment