மள்ளர்
மள்ளர் |
---|
மொத்த மக்கள்தொகை |
1 கோடி |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா, இலங்கை |
மொழி(கள்) |
தமிழ் |
சமயங்கள் |
இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம் |
மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், காலாடி, மூப்பன், குடும்பர், பன்னாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்[1][2].இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர். இவர்கள் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் வீழ்ச்சியுற்றிருந்ததால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு பட்டியல் சாதிகள் SC பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மிகவும் வீழ்ச்சியுற்றிருந்த நிலையில் இருந்த இந்த சமுதாயத்தினர் தற்போது கல்வி, அரசியல், பொருளாதாரம் போன்றவைகளில் முன்னேற்றமடைந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் வீழ்த்தப்பட்ட தமிழ்க்குடிகளில் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஒரு சில சமூகங்களில் இந்த சமுதாயம் முன்னிலையில் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு] வரலாறு
[தொகு] நெல் நாகரிகம்
உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள்” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.
[தொகு] நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல்
திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு
“ | விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான் நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . | ” |
−- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803 |
துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.
[தொகு] தமிழ் நில வகைகள்
தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை நான்கு வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், மற்றும்நெய்தல் எனப்பட்டன. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலும் கடல் சார்ந்த கடலை ஒட்டிய மணல் பரந்த நிலமும் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.
[தொகு] உலக நாகரிகஙகள்
ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் யுப்ரட்டீஸ், டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.
[தொகு] தமிழர் நாகரிகம்
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி, பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும். இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.
[தொகு] தொல்காப்பிய வேந்தன்
தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர், பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.
“ | வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் | ” |
−– தொல்காப்பியம் – பொருளதிகாரம் |
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனான (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.
[தொகு] பாண்டியன் வேந்தன்
பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.
“ | வானுட்கும் வழ நீண்டமதில் மல்லன் மூதூர் வய வேந்தெ. | ” |
−- புறநானூறு – 18,குடபுலவியனார் பாடியது. |
“ | சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ | ” |
−- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார். |
(பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது).
“ | பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய | ” |
−- புறநானூறு 24 |
மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.
[தொகு] சோழ வேந்தன்
சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.
“ | மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழ ங்கு தானை மூவருள்ளும் அரசெனப்படுவது நினதே பெரும ஆடுகட் கரும்பின் வெண்பா நுடங்கும்; நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ. | ” |
−- புறநானூறு 35. |
வெள்ளைக் குழ நாகனார் கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.
“ | சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆக காவிரி புரக்கும் நாடு கிழவோனே. | ” |
−- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248. |
கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.
[தொகு] சேர வேந்தன்
சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.
“ | விண்பொருபுகழ் விறல் வஞ்சிப் பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ வெப்புடைய வரண் கடந்து தும்புறுவர் புறம் பெற்றிசினே புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாழய பாடினியும்மே ஏருடைய விழுக் கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே | ” |
−-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது. |
“ | உழுபடையல்லது வேறு படையில்லை திருவில் அல்லது கொலை வில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார். | ” |
−(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20, குறுங்கோழியார் கிழார் பாடியது. |
(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் விஸ்ணுவர்மன் குடும்பர் குலத்தினன் எனக் கூறுகிறது.
“ | “விஸ்ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”. | ” |
இதன் பொருள் – விஸ்ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.
தேவேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.
சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,
மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
“ | உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே | ” |
−- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது. |
“ | சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவெ தலை. | ” |
−- திருக்குறள் 1031. |
“ | உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். | ” |
−-திருக்குறள் 1033. |
மருத நில மக்கள் மள்ளர், உழவர், களமர், கடைஞர், வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர், கடைசியர்,காலாடி, ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக
“ | "அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" | ” |
−- என்று திவாகர நிகண்டும். |
“ | "செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப" | ” |
−- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன. |
நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.
“ | "மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும் சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும் வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும் வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்" | ” |
திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.
இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.
மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.
“ | பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல் மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப் பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி. | ” |
−- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22. |
இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.
“ | கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால் மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு. | ” |
−- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25 |
“ | “குன்றுடைக் குலமள்ளர்” | ” |
என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.
“ | நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின் உதிர நீர் நிறைந்த காப்பின் கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின் இன மள்ளர் பரந்த கையில் கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே எனப் பொலியும் தகையும் காண்மின் | ” |
−- கம்பராமாயணம். |
வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21).
இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்பூமியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.
[தொகு] தெய்வேந்திரர் வரலாறு
“ | சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில் ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து மதுரையை நோக்கி வரும் வழியதனில் உலகலாமீன்ற உமையவள் மனதில் திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க கரமதில் வாங்கி வரமதுக்கியந்து வைகையில் விடுக்க வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக ஈசுவரி தேடி யிருளில் நடக்க கூவிய சத்தம் குமரனை நோக்கி வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து வலமார் பிய்ந்து அமுர்தம் பொழிந்து அ~;த்தம் கொடுக்க பாலன் நரிவு பணிவிடைக்காக புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க. | ” |
தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :
“ | கன்னல் சென்னல் கதழி பிலாவுடன் தென்னை கமுகு செறந்த வெள்ளிலை அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள் மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு தெய்வ சபையை தெரிசிக்க வென்று காராவின் பாலை கரகத்திலேந்தி சீறாக அன்னம் சிறப்பித்த போது. | ” |
தெய்வேந்திரன் விருதுகள் :
“ | ஈஷ்வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும் விமரிசையாக விருது கொடுக்க மாலயன் ருத்திரன் மகேஷ்பரன் மகிழ்ந்து பொன்முடி யதனில் பூசன மணிய வாடாத மாலை மார்பினி லிலங்க வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே டாலுடம்மான சத்தம் அதறிட மத்தாளம் கைத்தாமம் மகெஷ்பரத் துடனெ எல்லா விருதும் இயல்புடன் கொண்டு தெய்வ சபையை தெரிசனம் செய்து பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து புரவியிலேறி பூலோக மதனில் சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க மூவராசாக்கள் முடிமணம் சூட்ட செந்நெல்லை படைத்தோர் குகவேலருளால் குடும்பன் தழைக்க சிவனரளாலே திருநீறணிந்து யெல்லா வுலகும் யிறவியுள் ளளவும் தெள்ளிமை யாத செந்நெலை படைத்தோர் சேத்துக்கால்ச் செல்வரான செந் நெல் முடி காவரலான முத்தளக்கும் கையாதிபரான பாண்டியன் பண்டான பாறதகதபரான அளவு கையிட்டவரான மூன்று கைக்குடையாதிபரான பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான மாடக் குளத்தில் வந்துதித்தவறான பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய பழனித் தலத்தில் காணியாளனாகிய கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி. | ” |
−– பழனிப் பட்டயம், வரி 195 – 217. |
நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தமிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.
சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.
தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.