Saturday, May 14, 2011

தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை



Kumudham .. reports;





rtt
மிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடுவதாக’ சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளன.

இம் மாதம் ஒன்றாம் தேதி.. மதுரை மாவட்டம் வில்லூர் கிராமத்தில் ‘ஏன் இந்தத் தெருவுக்குள் வந்தாய்’ என தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரைத் திட்டியதாக ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய எஸ்.பி. கார் மீது கிராமத்தினர் கல்வீச்சு நடத்தி கலவரம் செய்தனர்.

துப்பாக்கிக்சூடு நடத்தி கலவரத்தை போலீஸார் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கலவரம் தொடர்பாக சட்டம், ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் இம்மாதம் முதல் வாரத்தில் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நிலவுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு ள்ளேன். தலித்துகளுக்கு குறிப்பிட்ட தெருக்களில் சைக்கிள், ஸ்கூட்டர் ஓட்டத் தடை, ஓட்டலில் உட்கார்ந்து சாப்பிடத் தடை, தெருக்களில் நடந்து செல்லத் தடை என ப ல்வேறு நிர்ப்பந்தங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது.

இது சட்டவிரோதமாகும். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீட்டுத் தரப்படும்...’’ எனக் கூறி தீண்டாமை இருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையே, தீண்டாமை குறித்து ஆய்வு செய்துள்ள ‘சாட்சியம்’ என்ற அமைப்பு தனது விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இது குறித்து சாட்சியம் அமைப்பின் திட்ட இயக்குநர் திலகத்திடம் பேசினோம்...

‘‘மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களில் 213 கிராமங்களில் தீண்டாமை குறித்து விரிவாக ஆய்வு செய்தோம்.

104 கிராமங்களிலுள்ள டீக்கடைகளில் ‘இரட்டை டம்ளர்’ முறை நடைமுறையில் உள்ளது. 211 கிராமங்களில் வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடு உள்ளது. இதில் கோயி லுக்குள் தலித்துகள் செல்ல அனுமதி மறுப்பு, தலித் குடியிருப்பு வழியாக தேர், சப்பரம் வர மறுப்பு என பல பாகுபாடுகளைப் பார்க்க முடிந்தது.

இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் அறங்காவலர் குழுவில் கூட, தலித்துகளுக்கு அனுமதியில்லை.

கோயில்கள் தொடர்பாக பல்வேறுவிதமான மோதல்களும் கலவரங்களும் ஏற்பட்டாலும் இருபது சம்பவங்களுக்கு மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்ப ட்டி செங்கமடையார் கோயிலில் உரிமை கேட்டதற்காக தலித் இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுள்ளார்.

அவரை சிரட்டையில் தண்ணீர் குடிக்க நிர்ப்பந்தித்திருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறார்கள். சங்கரன்கோவில் அருகில் உள்ள செந்தட்டி கிராம த்தில் கோயில் பிரச்னை தொடர்பாக நடந்த மோதலில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இருவர் கொலை செய்யப்பட்டனர். இது போன்ற நிறைய சம்பவங்களைச் சொல் லமுடியும்.
இதுதவிர, 213 கிராமங்களில் 70 கிராமங்களிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பாகுபாடு உள்ளது. அங்கு பொருட்கள் வாங்க மற்றவர்களுடன் தலித்துகள் வரிசையில் நிற்க முடியாத நிலை இருக்கிறது.

தலித்துகளுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனி நேரங்களில் பொருட்கள் விநியோகம், தரமான பொருட்கள் சாதி இந்துக்களுக்கும் தரமற்ற பொருட்கள் தலித்துகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

208 கிராமங்களில் மயானம் தொடர்பான பாகுபாடுகள் நிலவி வருகிறது. பெரும்பாலான கிராமங்களில் மயானங்கள் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. சில கிராமங்களிலுள்ள மயானங்களில் சாதிகள் பெயர்களில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

142 கிராமங்களிலுள்ள சலூன் கடைகளில் தலித்துகள் முடி வெட்ட முடியாது. 13 கிராமங்களில் தலித்துகளுக்கு முடி வெட்டுவதற்கு தனி கத்தரிக்கோல், சீப்பு பயன்படுத்து கிறார்கள்.

25 கிராமங்களிலுள்ள சலூன்களில் தலித்துகள் நாற்காலிகளில் உட்கார முடியாது. 111 கிராமங்களிலுள்ள சாவடி, சமுதாயக்கூடம், கலையரங்கம், மந்தை ஆகியவற்றில் தலித்துகள் உட்கார முடியாது.



சுத்தமாக துணி உடுத்துவதும் பல கிராமங்களில் தலித்துகளுக்கு சாத்தியமில்லை. 145 கிராமங்களில் உள்ள பொது நீர்நிலைகளில் தலித்துகள் தண்ணீர் பிடிக்க முடியாது. பொதுக்குளத்தை தலித்துகள் பயன்படுத்த இருபது கிராமங்களில் அனுமதி இல்லை. மெஜாரிட்டியான கிராமங்களில் சாதி இந்துக்களுக்கும், தலித்துகளுக்கும் தனித்தனியே நீர் நிலைகள் உள்ளன.

ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மருத்துவமனையிலும் பாகுபாடு காட்டப்படுவதை 33 கிராமங்களில் அறிய முடிந்தது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர்களும் இந்த தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.

‘‘தன்னை மருத்துவமனை ஊழியர்கள் ‘குப்பை டாக்டர்’ என கேலி செய்தனர்’’ என தலித் வகுப்பைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கூறியபோது அதிர்ச்சி அடைந்தோம். இதற்கும் மேலாக நாற்பத்தைந்து தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்கள் மீதும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுத்து மூலமாக எங்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதேபோல, பள்ளி வகுப்பறைகளிலும், சத்துணவு வழங்குவதிலும், பள்ளி விழாக்களிலும், கிராம விழாக்களிலும், பொதுக்கழிப்பறைகளிலும், பேருந்துப் பயணத்திலும் கடு மையான பாகுபாடு உள்ளதை ஆய்வின் மூலம் அறியமுடிந்தது’’ என்றார்.

தலித் மக்கள் இன்னும் தீண்டாமைத் தீயில் வெந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை வேடிக்கை பார்க்கிறது அரசு. பதவியும், பணமும் தலித் தலைவர்களின் வசமாகியி ருக்கிறது. இவர்களும் தலித் மக்களை விட்டு தள்ளியே நிற்பதுதான் வேதனையான விஷயம்.

No comments: