Sunday, December 25, 2011

’ரோமன் கான்கிரீட்’டில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையாக திகழும்!

IMG_1587ரோமன் கான்கிரிட்’டில் கட்டப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு அணை என்றும் இளமையாக திகழும் என்று மூத்த பொறியாளர் ராமநாதன் ஆதாரங்களுடன் விளக்கினார்.


மதுரையை சேர்ந்த மூத்த பொறியாளர் ராமநாதன் (வயது 77). நெடுஞ்சாலைத் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கட்டுமானப் பணிகளில் 55 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை அருகேயுள்ள தேவாரம் இவருடைய சொந்த ஊர். முல்லைப் பெரியாறு அணை பற்றியும், பெரியாறு பற்றியும் அனைத்து விவரங்களையும் அறிந்தவர். அது பற்றிய பல்வேறு ஆவணங்களையும், புத்தகங்களையும் படித்து ஆய்வு பணிகள் மேற்கொண்டவர். முல்லைப் பெரியாறு அணை குறித்த பல்வேறு தகவல்களை புகைப்பட ஆதாரங்களுடன் நேற்று மாலை வெளியிட்டார். சென்னை சிவானந்தா சாலையில் உள்ள என்ஜீனியர்கள் அலுவலக அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திரண்டிருந்த நிருபர்களுக்கும், இது தொடர்பாக பேட்டியளித்தார்.


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வீடியோ படத்தை வெளியிட்டு ராமநாதன் கூறியதாவது:-


முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே பிரமாண்டமான மாறாத உறுதி கொண்ட அணையை பென்னிகுயிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டினாலும், இதற்கான வித்தை விதைத்தவன் ஒரு தமிழன் தான். ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை என்பவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.


அப்போது இருந்த ஆங்கிலேயர்களுக்கு இதை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பல்வேறு காரணங்களால் இது தடைப்பட்டு வந்தது. இறுதியாக பென்னிகுயிக் இப்பணியை நிறைவேற்றினார்.


என்றும் இளமையானது


mullaiஇந்த அணையின் தொடக்கப் பணி 1887-ம் ஆண்டு முதல் நடைப்பெற்றது. முதலாண்டில் தொழிலாளர்களுக்கான தங்கும் இடங்கள் மற்றும் ஆயத்த பணிகள் நடைபெற்றன. 9 ஆண்டுகள் பணி தொடர்ந்து நடைபெற்று 1896-ம் ஆண்டு முடிவுற்றது. ராயல் என்ஜீனியரான பென்னிகுயிக் இப்பணியை ஒரு சவாலாக எடுத்து மேற்கொண்டார்.


80 ஆயிரம் டன் மணலும், 45 ஆயிரம் டன் ஓடுகளும் அணை கட்டுமானப் பணி நடைபெற்ற மலைப் பகுதிக்கு மாட்டு வண்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன. அணைக் கட்டுமானப் பணிக்கு செங்கல்கள் பயன் படுத்தப்படவில்லை. முழுக்க, முழுக்க ரோமன் சிமெண்டினால் கட்டப்பட்டது.


நீர்த்த சுண்ணாம்பு, கருங்கல் ஜெல்லி, மணல், எரிமலை சாம்பல் ஆகியவற்றை கொண்ட கலவை தான், ரோமன் கான்கிரிட். இவற்றை கொண்டு கட்டினால் அது நித்திய இளமைக் கொண்டதாக திகழும்.உதாரணத்திற்கு, கி.பி. 130 ஆண்டின் ஸ்பெயின் நாட்டில் கட்டப்பட்ட கார்னல் போ என்ற அணை ரோமன் கான்கிரிட்டால் கட்டப்பட்டதாகும்.


இந்த அணை சுமார் 2,000 ஆண்டுகளாக இளமைக் குன்றாமல் கம்பீரமாக நிற்கிறது. இத்தனைக்கும் அந்த அணை அமைந்துள்ள பகுதி பலமுறை 5 முதல் 6 ரிக்டர் வரையிலான நிலஅதிர்வுக்கு ஆளானது. அப்படியிருந்தும் அந்த அணை அசைந்து கொடுக்கவில்லை.


அப்படியானால், முல்லைப் பெரியாறு அணை ரோமன் கான்கிரிட்டால் கட்டப்பட்டு சுமார் 120 ஆண்டுகள் தான் ஆகிறது. இதன் வலிமை பற்றி கூறவும் வேண்டுமா? இங்கு அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவதாக கூறுகிறார்கள். இந்த மண்டலம் ரிக்டர் அளவுகோலில் 4-க்கும் குறைவாக அதிர்வு ஏற்படக் கூடியதாகும். எனவே, இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.


மேலும், ஓர் அணையில் நீர் கசிவு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மனிதனின் உடம்பில் வியர்வை எவ்வளவு முக்கியமோ, அது போல அணைக்கு நீர் கசிவு இருக்க வேண்டியதும் அவசியமாகும். முல்லைப் பெரியாறு அணையில் எந்தளவு நீர்கசிவு இருக்க வேண்டுமோ, அது உள்ளது. இது இருக்க வேண்டிய அவசியத்தை பென்னிகுயிக்-கை குறிப்பிட்டுள்ளார்.


பெரியாறு - ஓர் ஆய்வு


முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பெரியாறு நதி சிவகிரி மலையில் இருந்து உற்பத்தியாகிறது. சிறிது தொலைவு ஓடிய பிறகு இந்தDec_08_Mullai-periyaru-dam ஆற்றில் சின்ன முல்லையாறும், பெரிய முல்லையாறும் தனி உப நதிகளாக ஓடி வந்து கலக்கின்றன. இதன் பிறகு தான் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு இருக்கிறது.


முல்லைப் பெரியாறு நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து அரபிக்கடலில் கலக்கும் இடம் வரை ஆற்றின் மொத்த நீளம் 244 கிலோ மீட்டராகும். இதில், 189 கிலோ மீட்டர் வரை மலைப் பிரதேசமாகும். இது வரை பாசன வசதிப் பெறும் நிலம் கிடையாது. அதன்பிறகு, 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு சிறிது பாசன வசதி நடைபெறுகிறது.


இறுதியாக 15 கிலோ மீட்டர் தொலைவு உள்ள ஆறு கடலில் கலக்கும் வரை மிகுந்த நச்சுத் தன்மை அடைகிறது. அப்பகுதியில் உள்ள 247 ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவு நீர் அந்த ஆற்றில் கலக்கிறது.


கேரளாவின் நோக்கம்


முல்லைப் பெரியாறு அணை ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதன் மைய நோக்கம் தமிழகத்தில் உள்ள மதுரை, ராமநாதபுரம் உள்ளடங்கிய மாவட்ட மக்களின் விவசாயத் தேவையையும், குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கு தான், கேரளா இந்த ஆற்றின் மூலம் எவ்வித பாசன வசதியை பெற வேண்டிய சூழ்ல் இல்லை. அவர்களுடைய ஒரே குறி இந்த ஆற்றை பயன்படுத்தி கூடுதல் மின்சக்தி பெறவேண்டும் என்பது தான்.


இதற்காக தான் முல்லைப்பெரியாறு அணையை அகற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். 1970 வரை, இப்பகுதியில் நில அதிர்வு கிடையாது. அதன் பிறகு தான் கீழ் பகுதிகளில் இடுக்கி அணையும், சிறுதோணி, குலமேவு அணைகளும் கட்டப்பட்டன. சமீபகாலமாக நில அதிர்வுகள் ஏற்படுவதற்கு இந்த 3 அணைகளும் தான் காரணம். இந்த மூன்றிலும் உள்ள நீர்மட்டத்தின் அளவை குறைத்தாலே அப்பிராந்தியத்தில் நில அதிர்வு ஏற்படாது.


காப்பாற்ற வேண்டும்


7-12-2011-42-research-engineer-of-the-dam-nமாறாத இளமை கொண்ட உறுதியான, முல்லைப் பெரியாறு அணையை தமிழகம் காப்பாற்றியே தீர வேண்டும். கேரளா கூறுவது போல, முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை அங்கு கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராது. இதன் எதிர்விளைவு தமிழ்நாட்டில் மிக கடுமையாக இருக்கும். நம்முடைய லோயர் கேம்ப் பகுதியில் நீர்மின்சக்தி கிடையாது.


முல்லைப் பெரியாறு அணையில் இருந்து சுருளியாற்று வழியாக கணிசமான நீர் தற்போது வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வைகை அணைக்கு பிரதானமான நீர் ஆதாரமே முல்லைப் பெரியாறு அணை தான். அந்த நீர் பறி போக விட்டு விடக் கூடாது. அப்படி ஒரு நிகழ்வு நடந்து விட்டால், நினைத்து பார்க்க முடியாத மிக மோசமான நிலைமையை தமிழ்நாடு அடையும். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய பகுதிகள் பாலைவனமாகிவிடும்.


ரோமன் கான்கிரிட் மற்றும் சிமெண்டால் ஸ்பெயினில் கி.பி. 130-ல் கட்டப்பட்டுள்ள கார்னல் போ அணையை அந்த நாட்டு அரசு தேசிய சின்னமாக அறிவித்து பெருமைப் படுத்தியுள்ளது. அது போன்ற அந்தஸ்த்தை நம்முடைய முல்லைப் பெரியாறு அணைக்கும் நாம் கொடுத்து அதை பராமரித்து வர வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்நிகழ்ச்சியில் பொறியாளர் சங்க நிர்வாகிகள் சத்திய மூர்த்தி, திருநாவுக்கரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மூத்த பொறியாளர் ராமநாதன், தன்னுடைய ஆரம்ப கல்வியை தேவாரத்தில் பயின்றார். போடியில் உயர் நிலைக் கல்வியையும், திருச்சி புனித சேவியர் கல்வியில் இன்டர் மீடியட் படிப்பையும் முடித்தார். காக்கிநாடாவில் பொறியியல் பட்டம் பெற்று அரசு பணியில் சேர்ந்தார்.


ஏராளமான சமூக நலப்பணிகளில் ஈடுபட்டுள்ள இவருடைய மனைவி பெயர் கமலா அம்மையார். மூத்த மகன் ஜெயராமன் சென்னை மருத்துவ கல்லூரியில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் காண்டீபன் பொறியாளராக உள்ளார். ஒரே மகள் தேவி, தேனியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.


நன்றி : மாலை முரசு

அமைச்சர்களே தயாராக இருங்கள் !

தமிழ்நாட்டு ஆளும் அ.தி.மு.க. அரசின் அமைச்சர்களாக இருக்கிறவர்கள் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம் என்று போயஸ் தோட்டத்தின் வானிலை மையத்தின் தலைவர் ஜெயலலிதா எச்சரிக்கை செய்துள்ளார்.


”தி.மு.க. ஆட்சியின் அடிக்கடி நடந்தது பாராட்டு விழாக்கள். அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி நடப்பது பதவியேற்பு விழாக்கள்” என்று ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.


அந்த விழா இன்னும் ஒரு நாளிலோ அல்லது இரு நாளிலோ அல்லது பொதுக்குழுவுக்கு முன்னதாகவோ நடக்கும் என்று தெரியவந்துள்ளது.


சசிகலா இடம் பெயர்ந்தார். சனி கிரமமும் இடம் பெயர்ந்தாகிவிட்டது. இன்னும் அமைச்சர்கள் மட்டும் ஏன் இடம் பெயரவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை குறித்து விசாரித்த, போயஸ் தோட்டத்தில் விசாரித்த போது, “எந்த நேரத்திலும் அமைச்சர்கள் மாற்றப்படலாம்” என்று தகவல் கிடைத்தது.


இதுவரை அம்மாவிடம் நல்ல பெயர் எடுத்த அமைச்சர்கள் கூட, துறை மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது. சில அமைச்சர்கள் சிவப்பு விளக்கு காரிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


இந்த மாற்றம் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் Rosaiah_11aகே,வி.ராமலிங்கம். இவர் பெயருக்கு தான் பொதுப்பணித்துறை அமைச்சர். அமைச்சராக இருந்து ஆட்டிப்படைத்தவர் ராவணன். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழில்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, வனத்துறை அமைச்சர் பச்சமால், வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் உள்ளிட்ட் பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம். அல்லது துறைகளாவது மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.


இந்த பதவியேற்பு விழா நடக்கும் என்பதால், கவர்னர் ரோசய்யாவை எங்கேயும் போக வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.


அதிக பதவியேற்பு விழாக்களை நடத்தி, இந்தியாவிலேயே அதிக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பெருமை ரோசய்யாவுக்குத்தான் சேரும்.

பரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை


பரமக்குடி சம்பவம். உண்மை அறியும் குழு அறிக்கை


புதன்கிழமை, 12 அக்டோபர் 2011 15:10

பரமக்குடி சம்பவம் தொடர்பாக, மக்கள் கலை இலக்கியக் கழகம், மனித உரிமை கண்காணிப்பகம் என்று தொடர்ச்சியாக உண்மை அறியும் குழு அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வரும் சனியன்று, சென்னை, எழும்பூரில் உள்ள இக்சா அரங்கத்தில் பரமக்குடி சம்பவம் தொடர்பாக உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப் பட இருக்கிறது. இந்த அறிக்கை புகைப்படங்களுடன் வண்ணத்தில் நூல் வடிவில் வெளியிடப் படுகிறது. அந்த நூலை பழ.நெடுமாறன் வெளியிட, விடுதலை ராசேந்திரன் பெற்றுக் கொள்கிறார்.

parama_notice_6

தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான்

தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான்.

AgxNpUECMAEQl2l

அரசு வேலை வேண்டும் என்பதற்காக காவல்துறை பணியில் சேர்ந்த காவலரின் நிலையைப் பார்த்தீர்களா... இதற்காகவா மக்களின் வரிப்பணத்தில் இந்த கான்ஸ்டபிளுக்கு சம்பளம் கொடுக்கப் படுகிறது. குனிந்து ஷு லேசை கட்ட முடியாத நபர் எதற்காக காவல்துறைப் பணியில் இருக்கிறார் ? தான் அதிகாரி என்ற ஆணவமல்லாமல் வேறு என்ன இது ?


Wednesday, December 21, 2011

ஒழிந்ததா மன்னார்குடி மாஃபியா ?

http://www.savukku.net/home1/1416-2011-12-20-04-30-50.html

ஒழிந்ததா மன்னார்குடி மாஃபியா ?

எழுத்தாளர் சவுக்கு
செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011 09:42

வாழ்த்துக்கள் ஜெயலலிதா என்றுதான் இந்தக் கட்டுரையை தொடங்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அப்படித் தொடங்குவதற்கு பெரும் தயக்கம் வருவதற்கு காரணம், கடந்த கால வரலாறு. நடராஜன் நீக்கம், தினகரன் நீக்கம் என்று போயஸ் தோட்டத்திலிருந்து பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அவை நீர்த்துப் போய் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விட்டது வரலாறு. காலப்போக்கில், நடராஜன் போன்றவர்கள் மீண்டும் அதிகார மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

sasi1

சசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான நட்பு 1982ம் ஆண்டில் தொடங்கியது. சசிகலாவின் கணவர் நடராஜன் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவோடு இருந்த நட்பின் அடிப்படையில் தனது மனைவியையும் அறிமுகப் படுத்துகிறார். ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதிமுகவில் எம்ஜிஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்போது இருப்பது போல ஜெயலலிதாவுக்கு பிசியான வாழ்க்கை இல்லை என்பதால், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடையை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவிடம் தனது வீட்டுக்கு தினமும் வீடியோ கேசட்டுகளை வழங்கச் சொல்கிறார்.

தினந்தோறும் வீடியோ கேசட்டுகளை சசிகலாக வழங்கி வரும்போது, ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு நெருக்கமாகிறது. எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் மற்றும், எம்.ஜி.ஆர் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்ட நேரத்தில் சசிகலா, ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த போதுதான், ஜெயலலிதாவுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது புரிகிறது. அப்போதைய சூழ்நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் அணிகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்து பல உதவிகளைச் செய்கிறார். இதையடுத்து இவர்களின் நட்பு பலப்படுகிறது.

1991ல் ராஜீவ் காந்தி மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி மிகப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கிறது. அது வரை தனது கணவர் நடராஜனோடு, பெசன்ட் நகர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் சசிகலா, ஒரேயடியாக போயஸ் தோட்டத்துக்கு வந்து விடுகிறார். அப்போதெல்லாம் நடராஜன், அதிமுகவில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, தான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா, சசிகலாவின் சம்மதத்தோடு, நடராஜன் கட்சியிலிருந்து நீக்கப் படுகிறார், அவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.

thirumalaisamy

சசிகலாவின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அது கருணாநிதியை விட மிகப் பெரிய ஆக்டோபஸ் குடும்பம்.

சசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம். இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகள் அனுராதாதான் தற்போது ஜெயாடிவியை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மற்றொரு மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ்.

சுந்தவரதனத்துக்கு அடுத்தவர் சமீபத்தில் காலமான வனிதாமணி. இவரது கணவர் விவேகானந்தன். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன். இவர்கள் கரன் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். வளர்ப்பு மகன் சுதாகரனை ஜெயலலிதா விலக்கி வைத்து, அவர் மீது ஹெராயின் வழக்கு போட்ட போது, இந்த வனிதாமணி சென்னை வந்து ஜெயலலிதாவிடம் கடுமையான சண்டையிட்டிருக்கிறார். நீங்கள் கேட்டீர்கள் என்றுதான் சுதாகரனை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்ள சம்மதித்தேன், இப்போது இப்படிச் செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். கோபமடைந்த ஜெயலலிதா, இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று சொல்லி வனிதாமணியை அனுப்பி விட்டார். இதனால்தான் ஜெயலலிதா, வனிதாமணி மரணத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களது மற்றொரு மகனான டிடிவி.தினகரன், இவர்களது தாய் மாமன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார்.

வனிதாமணிக்கு அடுத்த சகோதரர் வினோதகன். மகாதேவன் என்பவர் இவரது வாரிசு என்று கூறப்படுகிறது.

இந்த வினோதகனுக்கு அடுத்த சகோதரர் ஜெயராமன். இவரது மனைவிதான் இளவரசி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.

இவர்களுக்கு அடுத்தவர்தான் சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனின் தம்பி ராமச்சந்திரன்.

சசிகலாவுக்கும் அடுத்த சகோதரர் திவாகரன். இவர் மன்னார்குடியிலேயே இருக்கிறார்.

இது சசிகலாவோடு பிறந்தவர்களைப் பற்றிய விபரம். (இதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது) இது போக, மன்னார்குடியைச் சேர்ந்த, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சசிகலாவின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வது, அதிமுக ஆட்சியின் சோகங்களில் ஒன்று.

1991ல் போயஸ் தோட்டத்துக்கு குடிபெயர்ந்த சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் அராஜகத்தை அன்றைய தமிழகம் வேதனையோடு பார்த்தது. 1991-1996 ஆட்சி காலத்தில் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அப்போதுதான் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ரவுடிகளை விட்டு அடிக்கும் கலாச்சாரம் வளர்ந்தது. இந்த ஆட்டோ கலாச்சாரத்தையும் ரவுடிகளின் கூட்டத்தையும் பராமரித்துப் பேணிக் காத்தவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன். சசிகலா குடும்பத்தின் பேராசை எப்படி இருந்தது என்றால், சென்னை நகரில் அழகாக இருக்கும் கட்டிடங்களை பார்த்துப் பார்த்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு வாங்குவார்கள். இந்த மிரட்டலுக்கு பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் தப்பவில்லை. பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்.

தனக்கென்று சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஜெயலலிதா, எனக்கென்று குடும்பமும், அதற்கு ஒரு வாரிசும் இருந்தால், அந்த வாரிசின் திருமணத்தை இப்படித்தான் நடத்துவேன் என்று இந்த சமூகத்துக்கு பறைசாற்றும் விதமாக வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். நடிகர் திலகம் சிவாஜியின் மகளை பெண் கேட்டு, அந்தத் திருமணம் வெகு தடபுடலாக நடைபெற்றது. அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் திருமணம் என்று இந்தத் திருமணம் அழைக்கப் பட்டது.

jaya_sasi_weddig_jp_868559g

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால், அப்போது அதிமுகவிலிருந்து ராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தனர். சசிகலா குடும்பத்தின் இந்த அராஜகம் தலைவிரித்து ஆடத் தொடங்கி வெகுஜன மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், இது எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படாமல், தனது உடன்பிறவா சகோதரியோடு உற்ற துணையாக நின்றார்.

1991 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதுதான் சசிகலாவின் ஆதிக்கம் எத்தகையது என்பதை தமிழகம் உணர்ந்தது. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த சபாநாயகரின் இருக்கையில், சசிகலாவை அமர வைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா, சசிகலா முன்னிலையில் சேடப்பட்டி முத்தையா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து தனது விசுவாசத்தைப் பறைசாற்றினார்.

IN19_JAYA_SASI_OPS_868555g

1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வருகையால் நடந்த நெறிசலில் 48 அப்பாவி மக்கள் பலியானார்கள். ஆனால் இது எதுவுமே ஜெயலலிதா-சசிகலா நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

magamagam-1

magamagam01

1996ல் நடந்த தேர்தலில், மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அந்தத் தேர்தல் தோல்வி, ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக, தன் உடன் பிறவா சகோதரியால் இந்தத் தோல்வி என்பதை உணர வைத்தது. போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா. இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் வெளியிட்டார்.

ஒரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வருகை தரும் போது, ஜெயலலிதா வாசலில் வந்து நின்று, கேசரி கொடுத்து சசிகலாவை வரவேற்றார். வெளியேற்றி விட்டு, மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டது, சசிகலாவுக்கு, நாம் இல்லாவிட்டால், ஜெயலலிதா இல்லை என்ற ஆணவத்தைக் கொடுத்தது.

19VBG_SASIKALA_868561g

2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது. ஆனால் மன்னார்குடி மாபியாவின் யோசனைப்படி, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். பன்னீர்செல்வம், தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

Augu---24-f

அந்த காலகட்டத்திலும், மன்னார்குடி ராஜ்யம் கோலோச்சிக் கொண்டிருந்த போதுதான், அந்த மாபியாவுக்குள்ளாகவே உள்மோதல்கள் துவங்கின. தினகரனுக்கும் மகாதேவனுக்கும் மோதல். டாக்டர்.வெங்கடேஷ் என்ற புதிய நபர் தலைதூக்கினார். இப்படியான உள்மோதல்களுடன், அந்த ஆட்சியும், அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.

சரி ஆட்சியில்தான் இப்படி. கட்சியில் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் உள்ளதா என்றால், மன்னார்குடி மாபியாதான் கட்சியையே நடத்தும். மன்னார்குடி மாபியா தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும். அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருக்கும் தலைவர்களையெல்லாம் விட்டு விட்டு, 2007ல் தொடங்கப் பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு, நேற்றைக்கு முளைத்த காளானான டாக்டர்.வெங்கடேஷை தலைவராக்கியதே, மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.

DSC02875

டாக்டர் வெங்கடேஷ்

2011 தேர்தல் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப் பட்ட பட்டியலில், கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக வென்று வந்த தொகுதிகளும் அடக்கம். கட்சியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு உதாரணம் இது. பட்டியல் வெளியானதும், கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி, மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற முடிவுக்கு சென்றன.

2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறாமல் போயிருந்தால், அவரது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்திருக்கும். அப்படி இருந்தும், அந்தத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில், பணத்தை வாங்கிக் கொண்டு, இப்படி ஒரு குளறுபடியைச் செய்யத் துணிந்தது மன்னார்குடி மாபியா. ஆனாலும் ஜெயலலிதா பொறுமையாகவே இருந்தார்.

2011ல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் எல்லை மீறியது. பதவிக்கு வந்த நாள் முதலாகவே வசூல் வேட்டை கொடி கட்டிப் பறந்தது. அமைச்சர்கள் நியமனமாகட்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனமாகட்டும்… மன்னார்குடி மாபியா வைத்ததே சட்டம் என்று ஆனது.

IN19_JAYA_SASI_868554g

பூ ஒன்று புயலானதே !!!

திமுக ஆட்சியில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை அதிமுக ஆட்சியில் அப்படியே தொடர்ந்து நடைபெற்றது. சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்குக்கு 5 சதவிகித மதுபானங்களை சப்ளை செய்து வந்தது. இந்த சதவிகிதம், தற்போது 35 சதவிகிதமாக அதிகரித்தது. சசிகலாவின் கட்டளைகளை கச்சிதமாக நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்று ஒரு துறை உருவாக்கப் பட்டு, அந்தத் துறைக்கு பன்னீர்செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார். இந்த பன்னீர்செல்வம், தற்போது பணியில் உள்ள தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களை விட, அதிக அதிகாரம பொருந்தியவராக மாறினார். அமைச்சர்கள் நாள்தோறும், இவர் அறைக்குச் சென்று இவரது ஆசியைப் பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளாக இருந்த பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி, சசிகலாவின் ஏவலாளாக மாறி, அவர்கள் சார்பாக கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஆட்சி காலத்தில் மிக முக்கிய பதவியான சென்னை மாநகர கமிஷனராக இருந்த கண்ணாயிரம், மாநிலத்தின் மிக முக்கியப் பதவியான உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக்கப் பட்டார்.

தற்போது ஜெயலலிதா பதவியேற்றதும் ஏற்பட்ட ஒரு பிரத்யேகமான பிரச்சினை, பெங்களுரு வழக்கு. இந்த பெங்களுரு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்கும் நிலையை அடைந்துள்ளது. இனி இந்த வழக்கை காலம் தாழ்த்த முடியாத ஒரு நிலையில், ஜெயலலிதா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்.

இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் தான் முதல்வராக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சவுக்கு இது குறித்த கட்டுரையை, ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற தலைப்பில் அக்டோபர் 16 அன்று வெளியிட்டிருந்தது. அப்போது அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பல அன்பர்கள், இதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

DSC_4882

ஆனால், சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் போது சிக்கல்கல்கள் ஏற்படும் சூழலில், எம்.எல்.ஏக்கள் எப்படி கட்சி மாறுவார்கள் என்பது, கோவா, பெங்களுரு, உத்தரப்பிரதேசம், எம்ஜிஆர் இறந்த பிறகு, தமிழ்நாட்டில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களை கூர்ந்து நோக்குபவர்களுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை பெங்களுரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டால், அவர் மேல்முறையீடு செய்து, விடுதலை பெற்று வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மீதம் உள்ள நான்கரை ஆண்டுகளுக்கு பதவியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில்தான் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்துவார்களே ஒழிய, ஜெயலலிதாவுக்கு நிச்சயம் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு எம்எல்ஏவும், பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.

இந்த வழக்கின் முடிவை எதிர்நோக்கி, நடராஜன் வகுத்த சதித்திட்டத்திற்கு சசிகலா பக்கபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் பெங்களுரில், ஒரு ரகசியக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில், சசிகலா விலக்கி வைக்கப் பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனும், நடராஜனும், வேறு சில முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவால் பழிவாங்கப் பட்ட சுதாகரன், எப்படியாவது, முதலமைச்சர் பதவியில் நடராஜனை அமர வைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளவரசி, இந்தத் தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.

24

சசிகலாவுக்கு முன்னால் இருப்பவர்தான் இளவரசி

இதையடுத்தே, ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

கண்ணாயிரம் உளவுத்துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதும், பொன்மாணிக்கவேலை அந்தப் பதவிக்கு கொண்டு வந்ததும் சசிகலாதான். பொன்.மாணிக்கவேல் அப்புறப்படுத்தப் பட்டதும், அந்தப் பதவிக்கு தாமரைக்கண்ணனை கொண்டு வந்ததும் சசிகலாதான். முக்கியமான பதவிகளில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருவது, தன்னைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் வெளிப்பாடே என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து கொண்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

பரவலாக கூறப்படும் ஒரு கருத்து, ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு நாடகமே என்பது. மேலும், பெங்களுரு வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பெங்களுரு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதால், சட்டரீதியாக எந்தப் பலனும் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப் போவதில்லை.

sasi3

இதை நாடகம் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் கூட, சசிகலாவோடு சேர்த்து, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

அப்படியே இதை நாடகமாக எடுத்துக் கொண்டாலும், இந்த மன்னார்குடி மாபியா, மீண்டும் இது போன்ற அராஜகத்தை ஏற்படுத்த அஞ்சுவார்கள். மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அறிந்தவர்கள், ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். நம் எல்லாரையும் விட, ஜெயலலிதாவின் குணங்கள், மன்னார்குடி மாபியாவுக்கு நன்றாகவே தெரியும்.

19IN_JAYA_SASI_868551g

IN19_JAYA_IN_SUCEND_868553g

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது, கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா எடுத்த இந்த நடவடிக்கைகளோடு நின்று விடாமல், இந்த மாபியா கும்பல் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதே. இந்த மன்னார்குடி கும்பலின் அராஜகத்தையும் பொறுத்துக் கொண்டு, மீண்டும், மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா நன்றிக் கடன் பட்டிருப்பாரேயானால், இதை அவர் செய்யத்தான் வேண்டும்.

Comments

+6 #67 கிராமத்தான் 2011-12-21 12:53
ஆனால், ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து ஜெயல்லிதாவைக் கடிக்கும் போது தான் சோ, மோடி, சு. சாமி எல்லாம் ஆஜாராகி இருக்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கும் இதுநாள் வரை எந்தவித பாதிப்பும் இல்லை; ஜெ போய்விட்டால் தமது ராஜ்யத்திற்கே ஆபத்து என்று உணர்ந்து, இப்போது தான் ‘விழித்து’ சசி கும்பலை விலக்கி வைத்துள்ளார்கள் . இது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் வேண்டினாலும், தற்காலிக ஏற்பாடா என்று இன்னும் பலருக்கு ஐயம் உள்ளது.
உண்மையாக மக்களைப் பற்றி, தான் அடி வாங்கிய பிறகு உணர்ந்தவராக இருப்பின், மாவட்டம் தோறும் ‘சசி கும்பல் மீட்பு நீதிமன்றம்’ அமைத்து, பாதிக்கப்பட்டவர ்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து, கொள்ளை போனதை முறையிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தாமதமில்லாமல் ரௌடிகளை அழித்திட வேண்டும்; கட்ட பஞ்சாயத்து கும்பலை நசுக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; உடமைகளை திரும்பக் கிடைத்திட சட்டப்பூர்வமாக செய்திடல் வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்திடல் வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், ஜெயலலிதா புண்ணியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மக்களின் சாபம், தூபம் சும்மா விடாது.
Quote
+2 #66 கிராமத்தான் 2011-12-21 12:53
ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி புரிந்த இத்தனை ஆண்டுகளும் சசி மாபியா கும்பல் மக்களை கொள்ளை அடித்தது, மிரட்டி, ஏமாற்றி அநியாயமாக அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரித்தது, கட்ட பஞ்சாயத்து மூலம் கபளீகரம் செய்தது, அரசாங்க இயந்திரத்தை தவறான வழிகளில் இயக்கி, எந்தவித முன்னேற்ற பணிகள் எதுவுமே நடைபெறாமல் கஜானவை மட்டும் காலி செய்தது, ரௌடி ராஜ்யம் செய்தது, நீதிக்காக போரடுபவர்களை மிரட்டுவது, மற்ற சாதியில் உள்ள ரௌடிகளை மட்டும் போட்டுத் தள்ளுவது (மொனொபொல்ய் இன் றொந்டிச்ம்), ரேட் நிர்ணயம் செய்து பட்டியலிட்டு அரசாங்க ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதலுக்கு வசூல் செய்வது, மணல் கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் மிரட்டியே அடைந்து கொள்வது, சாதிக்காரனுக்கு மட்டுமே சகல உரிமைகள் என ஆட்டம் போட்டது, ஏரியாவுக்கு அங்கீகரிக்கப்பட ்ட சொந்தக்காரன் மூலம் மாமுல் வசூல் செய்வது – மந்திரி, உயர் அதிகாரிகள் மாதம் தோறும் கப்பம் கட்ட சாதிக்கார ப்.ஆ மூலம் கறாராக வசூல் செய்வது, ஒத்துவராதவர்களு க்கு கல்தா கொடுப்பது, ஊடகங்களில் இவர்களின் அக்கிரமங்களைப் பற்றிய எந்தவிதமான செய்திகளும் வராதபடி சாதிக்காரர்களில ் ஆளுமையில் வைத்திருப்பது - இன்னும் இது போன்ற காரியங்களால் தமிழக மக்கள் கடும் தொல்லைகளுக்கும் , பாதிப்பிற்கும் ஆளாகி இருந்ததை ஜெயலலிதா தன் சுயநலத்தால் ‘எனது தோழி’ என்று மறைத்து, பாதுகாத்து துரோகம் செய்து வந்தார்.
Quote
+10 #65 http://koothadivedda 2011-12-21 12:19
ஒருகாலத்தில் சசிகலாவின் கண்ணில் தூசு விழுந்தால்க்கூட காற்றையே குற்றம்கண்டு எதிர் நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர் ஜெயலலிதா. 30 வருடங்களின் பின் இன்று சசியை தனிப்பட்ட ஏதோ காரணத்தினால் விரட்டியிருக்கி றார். (அதை ஆராயவேண்டிய தேவையுமில்லை). ஜே எப்போதும் தன்னை வானத்திலிருந்து குதித்து வந்த தாரகையாக நினைத்து மக்களை மற்றும் அதிகாரிகளை நேரடியாக சந்திக்க விரும்பவில்லை. தனது பிரதிநிதியல்ல, நிகர் பிரதியாக சசியை உயிரினும் மேலான சோதரியாக வெளிப்படுத்தி மக்களையும் அதிகாரிகளையும் சசியை நோக்கி தள்ளியது ஜே தான். முதலில் மக்களையும் நாட்டையும் குளப்பாமல் ஜே தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியுள்ளது. http://koothadiveddai.blogspot.com/
Quote
+1 #64 Majini 2011-12-21 10:28
[ஃஉஒடெ நமெ="வென்கெயன்பு"]ட்ம்க் - மரன் க்ரொஉப்ச், ஆட்ம்க் - மன்னார்குடி க்ரொஉப்ட், பாவம் டமில் ணடு மாக்காள்[/ஃஉஒடெ]
ஆம் இருவரும் வீடியோ துறை சம்பந்த பட்டவர்கள்.
Quote
+5 #63 reader 2011-12-21 09:39
முதலில் சிலவற்றை யோசித்துப் பார்ப்போம். சசிகலா என்ற ஆமை ஏன் போயஸ் தோட்டத்தினுள் புகுந்தது? உறவுகள் (அண்ணன் குடும்பம்)இருந் தும் ஜெ தனிமையில் வாடினார். மன்னார் & கோ அவருக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுத்தது. அதுதான் மேட்டரே. இப்போதும் ஜெவுக்கும் அவர் அண்ணன் குடும்பத்துக்கு ம் ஒட்டுறவில்லை. வேறு யாரும் இந்த வெற்றிடத்தை இன்னும் நிரப்பவில்லை. இன்னும் பத்து நாளைக்கு ஜெ வேதா நிலையத்து விட்டத்தைப் பார்த்துக் கொண்டு வருந்தினால் மீண்டும் 'கண்கள் பனித்தன' அரங்கேறலாம். அப்போது சோ மாமாவுக்கு கஞ்சா கேஸ் வந்தாலும் வரலாம். ஜெ சுதாகரனுக்கும், அவர் அண்ணன் ஜெயக்குமார் மீதும் கஞ்சா கேஸ் போட்டவர் என்பதை மறந்துவிடாதீர்க ள்.
Quote
+3 #62 தாலி 2011-12-21 09:27
அருமை


இனி நல்ல காலம் பொராந்துருஷி



சவுக்கு
Quote
+12 #61 Muthukumar, Trichy 2011-12-21 06:11
காவல்துறையில் அடிமட்ட நிலையில் சசி சாதியினரின் ஊடுருவல் குறிப்பாக சிவகங்கை ராம்நாட் மாவட்டங்களில் எந்த அளவுக்கு என்றால் மேற்படி சாதியினருக்கு எதிராக எந்த வழக்கும் கொடுக்க முடியாது. இதைப்பற்றி சவுக்கு எழுத வேண்டும். முதலமைச்சருக்கு தயவு செய்து சவுக்கு போன்றவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.கந்துவட்டி தடைச்சட்டம் பெயரளவில்தான் உள்ளது.
Quote
+4 #60 Anbu2111 2011-12-21 05:39
Does last foto in this article has any punch ? :-x
Quote
-5 #59 nsharma 2011-12-21 05:05
[ஃஉஒடெ நமெ="கேயர்"]கேரளத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழுள்ளங்களுக் கு நன்றி. இவ்வளவு போராட்டங்களுக் கு இடையிலும் திமிராக இருக்கும் கேரள அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க வாருங்கள் தோழர்களே! நம் தாய்தமிழகத்தில் கல்வி கற்க வந்திருக்கும் கேரள மாணவர்களை அனைத்து தமிழக கல்லூரிகளிலிருந ்தும் விரட்டுவோம். சென்னையில் மென்பொருள் மற்றும் ஊடகதுறையில் இனவெறியில் ஊறிக்கிடக்கும் மலையாள வெறியர்களை விரட்ட தமிழர்களே ஒன்று திரள்வீர்...[/ஃஉஒடெ]

Geeyar...you are out of your stupid mind...don't do this. These innocent students did not create this problem, but the politicians both in TN and Kerala. People like you must be shot dead for creating violence in this country. Imagine your son or daughter is studying in Trivandrum and similar sentiments are expressed in kerala....would you feel comfortable? Stupid stupid man!
Quote
-6 #58 Nob 2011-12-21 01:10
[ஃஉஒடெ நமெ="வித்ய"]மன்னார்குடி மாஃப்யாவின் இடத்தை இனி எந்த பார்ப்பன கும்பல் பிடிக்க போகிறதோ!!![/ஃஉஒடெ]

உமமக்கு ஏன் இந்த ஜாதி வெறி...
Quote
+4 #57 soma 2011-12-21 00:53
இவனுஙா " கள்ளர் " சாதிய சேர்தவன்க... சாதி வெரி பிடித்த மிருஙகல்...
Quote
+2 #56 ambi 2011-12-21 00:17
இவாள் கிட்ட தப்பி அவாள் கிட்ட மாட்டிண்டாளே ஜெயா
ஏன்னா இப்ப சோ பிள்ளையான்டான் தான் போயஸ் கார்டென்ல எல்லாமுமேவாமே.விளன்கிடும்
Quote
+11 #55 ஷாலி 2011-12-20 23:55
சசியின் திருவிளையாடல்கள ் அரசின் எல்லாத்துறைகளில ும் கொடிகட்டிபரந்து வசூல் வேட்டை நடக்கும்பொழுது, முதல்வர் அம்மா என்ன செய்துகொண்டு இருந்தார்?

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு பூ பறித்துக்கொண்டி ருந்தாரோ? எல்லாமே நாடகம் அவ்வப்பொழுது காட்சிகள் மாறும். ஏனென்றால் ஆசை வெட்கம் அறியாது.மீண்டும் ஈருடல் ஓருடலாகும்
Quote
+2 #54 Kadarkkaraivaasi 2011-12-20 23:46
My opinion, 'Optimistically Cautious'...
Quote
-3 #53 காயத்ரிநாகா 2011-12-20 21:57
என்னுடைய பின்னூட்டத்தை ஏன் இடவில்லை சவுக்கு?
Quote
+2 #52 hello 2011-12-20 20:58
Last govt la adicha Nehru ipo trichy la real estate and mill business magnet, avan adichadhu avankitayaedhaa n iruku. Aatchi maarinadhaal avanuku arasiyal income matum thaan cut, mathapadi avan nalla thaan irukiraan. Evalum vandhu arrest panrenu nalla panam paartha.. Naalaiku vera aatchi maarina evunga aatchila adicha panathai vaichu evungalum business magnet aagiduvaanga, so finally public is fooled to the infinite times.. Dubai rape style punishment aambalaikum pombalaikum vaicha perfecta irukum ena solreenga?
Quote
+5 #51 tms 2011-12-20 20:19
ஜெயாவும் இனி இந்த கருத்தை சொல்வார், இதயம் கணித்தது, கண்கள் பளித்தன ?
Quote
+3 #50 காயத்ரிநாகா 2011-12-20 20:14
தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை மேய்வதோ? அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ? நானொரு கை பார்க்கிறேன்...! நேரம் வரும் கேட்கிறேன்...! பூனையல்ல புலி தான் என்று போகப் போக காட்டுகிறேன்...! போகப் போக காட்டுகிறேன்....!

ஜெயலலிதா
Quote
+13 #49 Suresh Raja 2011-12-20 20:07
அது தேஜாவு மாதிரி தான். திரும்ப ஒன்னு கூட மாட்டாங்கன்னு யாராலும் சொல்ல முடியாது. ஆனா உங்களோட இந்த பதிவுல நிறைய விஷயங்கள் இருக்கு... படிக்கிரப்போவே நல்லா தெரியுது நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டிருக்கீங் கன்னு... வாழ்த்துக்கள்.... :eek:

இந்த நீக்கம் நிரந்தரமா நிலைக்கனும்னு கடவுள வேண்டிக்க வேண்டியது தான்... இனிமேலாவது நமக்கு நல்ல காலம் பொறக்கட்டும்... :-) :-) :-)
Quote
+8 #48 geeyar 2011-12-20 19:58
கேரளத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழுள்ளங்களுக் கு நன்றி. இவ்வளவு போராட்டங்களுக் கு இடையிலும் திமிராக இருக்கும் கேரள அரசுக்கு இன்னும் நெருக்கடி கொடுக்க வாருங்கள் தோழர்களே! நம் தாய்தமிழகத்தில் கல்வி கற்க வந்திருக்கும் கேரள மாணவர்களை அனைத்து தமிழக கல்லூரிகளிலிருந ்தும் விரட்டுவோம். சென்னையில் மென்பொருள் மற்றும் ஊடகதுறையில் இனவெறியில் ஊறிக்கிடக்கும் மலையாள வெறியர்களை விரட்ட தமிழர்களே ஒன்று திரள்வீர்...
Quote
0 #47 Nanda 2011-12-20 19:45
சவுக்கு 'சமூகம்' என்ற நல்ல வார்த்தையை தவிர்த்து 'சாதி' என்றே குறிப்பிடலாம்

நந்தா
Quote
+12 #46 vilambi 2011-12-20 19:37
தமிழ் நாட்டில் ஜாதிப் பிரச்சினைகள் தோன் றம் ம்ழுமுதற் காரணம் சசிகலா கும்பல்தான்..இவர்களைப் பார்த்துதான் ராமதாசுக்கும் ஆசை வந்தது..ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்...ஆட்சி அதிகாரம் விஅன்ட்டு ஒருவர் கூட சசியோடு செல்ல மாட்டார்கள்...எந்த ஆட்சி வந்தாலும் மாமேன்...மச்சான் என்று வேட்டியை மாற்றுவர்...என்பதை ஜெ உணரவேண்டும்..எடுத்த முடிவில் உறுதியாய் நின்றால் அவருக்குப் பெருமை...அதே நேரம் சமயம் பார்த்து உள்ளே நுழையக் காத்திருக்கும் அவாள் கும்பலையும் அனுமதிக்கக் கூடாது...தமிழ் மக்களே என் பலம் என நின்றால் மட்டுமே அவரால் நிலைக்க முடியும்...
Quote
-29 #45 ஆல்வின் திமுக 2011-12-20 18:45
இன்னொருமுறை சவுக்கு அதிமுக மற்றும் ஜெவின் ஜால்ரா என்பது உறுதியாகியுள்ளத ு..
ஜெயலலிதாவிற்கான சவுக்கின் பணி தொடரட்டும்
Quote
+11 #44 SU samy 2011-12-20 18:28
Sasi kala's Thevar community dominated Tamilnadu in all departments, No chance given to others
Quote
+9 #43 Rangaraaj Raajendran 2011-12-20 18:02
Dear Savukku.Very Nice Article.Contents more informative than the dailies and magazines.Savukku Savukkuthan.You are an outstanding journalist ever.
Quote
+8 #42 vidhya 2011-12-20 17:59
மன்னார்குடி மாஃப்யாவின் இடத்தை இனி எந்த பார்ப்பன கும்பல் பிடிக்க போகிறதோ!!!
Quote
+7 #41 குட்டி 2011-12-20 17:19
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு அர்த்தம் இப்பொழுது நம் முதல்வருக்கு நன்கு புரிந்திருக்கும ்.....
Quote
+27 #40 saran trichy 2011-12-20 17:09
தமிழகத்தின் 2-வது பெரிய திருட்டு குடும்பத்தை(கும ்பலை )யும் ஒழித்துக்கட்டிய ஜெயலலிதாவுக்கு நன்றி.
Quote
+13 #39 force 2011-12-20 17:08
/இந்த மன்னார்குடி கும்பலின் அராஜகத்தையும் பொறுத்துக் கொண்டு, மீண்டும், மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா நன்றிக் கடன் பட்டிருப்பாரேயா னால், இதை அவர் செய்யத்தான் வேண்டும். /
மிகச்சரியான வார்த்தைகள். தமிழக மக்களுக்கு உண்மையான சனிப் பெயர்ச்சி இதுதான் .
Quote
+3 #38 sebastian 2011-12-20 16:44
குஜராத் மற்றும் திருப்பூர் துணி, ஆடை ஏற்றுமதி தொழில்களுக்கு "சீனாதான்" போட்டியாளராக உள்ளது. இன்னும் பல இந்திய உற்பத்திகளுக்கு ம் சீனாதான் போட்டியாளர்.
இந்த போட்டியில்தான் பல அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்.
முன்பு ரத்தன் டாட்டா அஸ்ஸாமின் "உல்ஃபா" தீவிரவாதிகளை சீனாவுக்கு எதிராக பயன்படுத்த முனைந்து அது ஆப்பிழுத்த குரங்கின் கதையாக முடிந்தது !.
Quote
+20 #37 saran trichy 2011-12-20 16:32
தமிழகத்தின் 2-வது பெரிய திருட்டு குடும்பத்தை (கும்பலை ) யும் ஒழித்துக்கட்டிய ஜெயலலிதாவுக்கு நன்றி.

சின்ன திருத்தம், சுதாகரன் மணந்தது சிவாஜி மகளை அல்ல அவரது பேத்தியை.
Quote
-2 #36 saravanan.m 2011-12-20 16:27
:lol:
Quote
+11 #35 ஊர்க்குருவி. 2011-12-20 16:16
ஆசைப்படுவது மனித இயல்பு. ஆனால் அது பேராசையாக மாறும்போது மனிதமனம் பேயாகிவிடுகிறது .

பேராசை கருணாநிதியை பிசாக்கியது. இப்போ தப்பிக்க தினமும் வேதம் ஓதிக்கொண்டிருக் கிறார்.

பேராசை ஜெயலலிதாவையும் பிடித்து ஒருகாலத்தில் ஆட்டியது.

சசிகலாவும் நட்ராஜ் னும் பேய் பிடித்ததால் போயஸ் ல் இருந்து ஓட்டப்பட்டிருக் கின்றனர்.

இருந்தும் Mr நட்ராஜனின் ஆசை பிடாரியையும் விஞ்சியது. மிகவும் நிதானமாக சந்தற்பம் பார்த்து (முதமமைச்சர்)கூ டுவிட்டு கூடுபாய காத்திருந்த வஞ்சகம் புல்லரிக்க வைக்கிறது.
Quote
+4 #34 danguvaaru andhurum 2011-12-20 16:15
போயஸ் கார்டன் நிர்வாகியாக பத்திரிகையாளர் சோ மகன் நியமிக்கப்பட்டு ள்ளார்.
முன்னதாக போயஸ் கார்டன் நிர்வாகியாக சசிகலா இருந்து வந்தார். அவரையும், அவரது குடும்பததினரையு ம் நேற்று அதிமுகவிலிருந்த ு அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இதையடுத்து போயஸ் கார்டன் தலைமை நிர்வாகியாக சோவின் மகன் கார்த்திக் நியமிக்கப்பட்டு ள்ளார்.
மேலும் முன்பு போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவால் நீக்கப்பட்டு சிலரை மீண்டும் பணியில் நியமித்துள்ளதாக வும் கூறப்படுகிறது.

-நன்றி தினமணி (சவுக்கு சார்பாக)
Quote
-15 #33 pandaram 2011-12-20 16:14
எல்லாம் சோவின் நாடகம்.இப்போ தேவர் போயி பார்பான் வந்தான் டும் டும் டும்.
சவுக்கு வுப்பு போட்டு சாப்பிடலயா?
Quote
+4 #32 danguvaaru andhurum 2011-12-20 16:14
போயஸ் கார்டன் நிர்வாகியாக பத்திரிகையாளர் சோ மகன் நியமிக்கப்பட்டு ள்ளார்.
முன்னதாக போயஸ் கார்டன் நிர்வாகியாக சசிகலா இருந்து வந்தார். அவரையும், அவரது குடும்பததினரையு ம் நேற்று அதிமுகவிலிருந்த ு அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இதையடுத்து போயஸ் கார்டன் தலைமை நிர்வாகியாக சோவின் மகன் கார்த்திக் நியமிக்கப்பட்டு ள்ளார்.
மேலும் முன்பு போயஸ் கார்டனில் இருந்து சசிகலாவால் நீக்கப்பட்டு சிலரை மீண்டும் பணியில் நியமித்துள்ளதாக வும் கூறப்படுகிறது.

-
நன்றி தினமணி (சவுக்கு சார்பாக).
Quote
+6 #31 danguvaaru andhurum 2011-12-20 16:05