”தி.மு.க. ஆட்சியின் அடிக்கடி நடந்தது பாராட்டு விழாக்கள். அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி நடப்பது பதவியேற்பு விழாக்கள்” என்று ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம்.
அந்த விழா இன்னும் ஒரு நாளிலோ அல்லது இரு நாளிலோ அல்லது பொதுக்குழுவுக்கு முன்னதாகவோ நடக்கும் என்று தெரியவந்துள்ளது.
சசிகலா இடம் பெயர்ந்தார். சனி கிரமமும் இடம் பெயர்ந்தாகிவிட்டது. இன்னும் அமைச்சர்கள் மட்டும் ஏன் இடம் பெயரவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதை குறித்து விசாரித்த, போயஸ் தோட்டத்தில் விசாரித்த போது, “எந்த நேரத்திலும் அமைச்சர்கள் மாற்றப்படலாம்” என்று தகவல் கிடைத்தது.
இதுவரை அம்மாவிடம் நல்ல பெயர் எடுத்த அமைச்சர்கள் கூட, துறை மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது. சில அமைச்சர்கள் சிவப்பு விளக்கு காரிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மாற்றம் பட்டியலில் ஹிட் லிஸ்டில் இருப்பவர் பொதுப்பணித்துறை அமைச்சர் கே,வி.ராமலிங்கம். இவர் பெயருக்கு தான் பொதுப்பணித்துறை அமைச்சர். அமைச்சராக இருந்து ஆட்டிப்படைத்தவர் ராவணன். போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழில்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் தங்கமணி, வனத்துறை அமைச்சர் பச்சமால், வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் உள்ளிட்ட் பத்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் மாற்றப்படலாம். அல்லது துறைகளாவது மாற்றப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழா நடக்கும் என்பதால், கவர்னர் ரோசய்யாவை எங்கேயும் போக வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
அதிக பதவியேற்பு விழாக்களை நடத்தி, இந்தியாவிலேயே அதிக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த பெருமை ரோசய்யாவுக்குத்தான் சேரும்.
No comments:
Post a Comment