skip to main |
skip to sidebar
20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணி - ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்
மள்ளர்குல
சொந்தங்களே...., வருகிற 20-02-2012(புதன் கிழமை) மதியம் 2:30 மணியளவில்
சென்னை எழிலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்து
ஆதிதிராவிடர் நலத்துறை கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளது. இதற்குமுன்
நடத்திய கூட்டத்திற்கு 50- இக்கும் மேற்ப்பட்ட பறையர் அமைப்புகளுக்கு
மட்டும் அழைப்பு விடுத்து, நம்மில் நீதிபதி கலியபெருமாள் அவர்களை மட்டும்
அழைத்து அவரையும் அக்கூட்டத்தில் அவமானப்படுத்தி உள்ளனர்.
இப்பொழுதும் அதேபோல பறையர்களை மட்டும் அழைத்து ஆதிதிராவிடர் என்ற
ஆணையத்தின் பெயர் தொடரலாம் என அறிக்கை கொடுக்க சதித் திட்டம் தீட்டி
உள்ளனர். வருகிற 26- ஆம் தேதிக்குள் பெயரை மாற்றுமாறு நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ள நிலையில் இக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த
வாய்ப்பை விட்டால் மேலும் பல வருடங்கள் ஆரம்பத்தில் இருந்து போராட
வேண்டியிருக்கும். எனவே அனைத்து மள்ளர்களும் பணிக்கு விடுப்பு எடுத்து
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென உரிமையோடு அழைக்கிறோம் .இன்று இதை
நாம் செய்யாவிடில் இத்தலைமுறையில் இனிமேல் இப்பெயரை மாற்றும் வாய்ப்பு
நம்மால் கிடைக்கப் போவது இல்லை... வாரீர் மள்ளர்களே...!! உரிமை வெல்வோம்
...!! இனம் காப்போம்...!!
சேலம் வழக்கறிஞர் திரு. கலிய
பெருமாள் அவர்களின் அழைப்பின் பேரில் அண்ணன் மாவீரன் ஜான் பாண்டியன்
அவர்கள் இந்த பெயர் மாற்று கருத்தரங்கிற்கு வர சம்மதம்
தெரிவித்துள்ளார்கள். சென்னையில் உள்ள தேவேந்திரர்கள் அவர்கள் இருவருடனும்
சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். பெயர் மாறுதலில் நம் பங்கும் இருக்க
வேண்டும் என்று தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பின் சார்பாக அழைக்கிறோம்.
நாம் அனைவரும் இந்த நேரத்தில்
ஒன்று கூடி நமது அதிருப்தியை தெரிவித்து ஆதி திராவிடர் என்ற பெயரை நீக்க
வேண்டும். அதற்க்கு, சென்னை மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள
நமது அணைத்து இயக்கங்களும் கட்டாயம் சென்னைக்கு வரவேண்டும். சென்னையில்
உள்ள திரிசூலம் மற்றும் நம் மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் தயவு
செய்து மக்களை திரட்ட வேண்டும். நம்மில் உள்ள மட்டற்ற இயக்கங்களை ஏன்
கூப்பிடவில்லை என்ற கேள்வியையும் அவர்களிடம் கேட்க வேண்டும். மேலும்,
சம்மந்தப்பட்ட, நம் மக்கள் அதிகமாக வாழும் தென் மாவட்டத்தில் ஏன் இந்த
கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் கேட்கவேண்டும்.இந்த நேரத்தில் தான் நாம்
ஒட்ட்ருமையுடன் செயல்படவேண்டும். நான் சென்னையில் உள்ள DYWA , இயக்கம்
சார்ந்த நண்பர்களுக்கு எனது நன்றியை இந்த நேரத்தில் கூறிகொள்கின்றேன்.
ஏனெனில், அவர்கள் மற்ற இயக்கங்களையும் ஒன்று சேர்த்து போராடுவதற்கு
பாடுபடுவதாக கேள்விப்பட்டேன்.நாங்களும்,
கோயம்புத்தூர் மற்றும் பல ஊர்களிலும் இருந்து வரவுள்ளோம்.ஆனால்
பெருவாரியாக உள்ள தென் மாவட்டங்களில் நிலைபாடு என்ன என்று தெரியவில்லை.
ஏனெனில், இதுவரைக்கும் எந்த இயக்கமும் ஈமெயில் மூலமாகவோ அல்லாது முகநூழிலோ
இதைப்பற்றிய செய்திகள் வெளிவிடவில்லை.
எனவே, நாம் வீராதி வீரன்,
சூராதி சூரன் என்று மற்ற வேளைகளில் பெருமை பேசி ஒரு பிரயோசனமும் இல்லை.
பெரும்பாலும், நமது முகநூல்கள் வீரதேவேந்திரன், வீரமள்ளர்கள், என்று
பெயரில் நிறையாபேர் உள்ளனர். அந்த மக்கள் இந்த சமயத்தில் விழிப்புடன்
செயல்பட்டால், நாம் வெறுமனே பேசியதோடு மட்டும் இல்லாமல் செயல்பாட்டிலும்
பங்கெடுத்த மாதிரி இருக்கும்.
No comments:
Post a Comment