Wednesday, December 3, 2008

பகுஜன் சமாஜ் கட்சியில் சேர எஸ்.வி.சேகர் பரிசீலித்து வருகிறார்.

Make phone calls to any country using virtual phone cards



மாயாவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியில் சேர எஸ்.வி.சேசர் பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.


சென்னை: மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் நடிகர் எஸ்.வி.சேகர். இவருக்கு அண்மை காலமாக அதிமுகவில் நடக்கும் எந்தவிதமான கூட்டங்களுக்கும் அழைப்பு கொடுக்கப்படுவதில்லை.

அண்மையில் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கும் அழைப்பல்லை என்றும், அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டடங்கள், உண்ணாவிரதம் போன்றவற்றிலும் இவரது பெயர் இடம் பெறவில்லை என்றும் எஸ்.வி.சேகரே செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.

எஸ்.வி.சேகர் அதிமுகவில் ஓரம்கட்டப்படுவதை அறிந்த, பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் இணையும் படி அவருக்கு அழைப்பு விடுத்தன. இந்நிலையில் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து செய்தியார்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,

மாயவதி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியினர் அக்கட்சியில் சேர என்னிடம் பேசியது உண்மைதான். மரியாதை நிமித்தமாக நானும் மாயாவதியை சந்திக்க இருக்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சியில் 25 முதல் 30 சதவீத இடங்கள் பிராமண சமூகத்தினருக்கு வழங்கப்படுகிறது. எனவே அக்கட்சியில் இணைவது பற்றி நான் பரிசீலித்து வருகிறேன்.

இந்த சமூகத்தில் தலித் மக்கள் அழுத்தப்படுகின்றனர். பிராமணர்கள் ஒதுக்கப்படுகின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதர மாநிலங்களிலும் அதே நிலைமை உருவாக வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சியில் சேருவது எனது சமுதாய மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும் என்று கருதுகிறேன். பிராமண சமுதாயத் தினரையும், தலித் மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடப்போகிறேன். எங்கள் உரிமைகளை பெற இணைந்து போராடுவோம் என்றார். மேலும் வரும் 6ஆம் தேதி குரு பெயர்ச்சி வருகிறது. அதன் பிறகு மாற்றங்கள் இருக்கும் என்றார்.

No comments: