Thursday, September 3, 2009

புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி வழக்கு

புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி வழக்கு
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 8 மே 2009 ( 16:09 IST )
புதிய தமிழகம் கட்சி கொடியை தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தள்ளி வைத்துள்ளது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன்,சென்னை சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பல தலைமுறைகளாக எங்கள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே பச்சை நிறத்தையும் கொண்ட 3:2 அளவில் கொண்ட கொடியை பயன்படுத்தி வருகிறோம்.இந்த கொடி எங்களுக்கே உரித்தானது.

ஆனால் இந்தக் கொடியை புதிய தமிழகம் கட்சி பயன்படுத்தி வருகிறது.ஆகவே புதிய தமிழகம் கட்சி இந்த கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' எ‌ன்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை 5-வது சிட்டி சிவில் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நீதிபதி முகமதுஅப்தாகிர் முன்பு விசாரணைக்கு வந்தது.அ‌ப்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் டா‌க்ட‌ர் கிருஷ்ணசாமி சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.

''புதிய தமிழகம் பயன்படுத்தி வரும் கொடிக்கு தடை விதித்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும்.1995ம் ஆண்டு முதல் இந்த கொடியை புதிய தமிழகம் பயன்படுத்தி வருகிறது.புதிய தமிழகம் தேர்தல் ஆணைய‌த்தா‌ல் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும்.

சட்டமன்றம், பாராளுமன்றம் உள்பட 6 தேர்தல்களில் இந்த கட்சி போட்டியிட்டுள்ளது.புதிய தமிழகம் பயன்படுத்தி வரும் கட்சி கொடியானது தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்புக்கு சொந்தமானது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. ஆகவே எக்காரணத்தை முன்னிட்டும் தடை விதிக்க கூடாது'' எ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர் ‌பிரபாகர‌ன் வாதாடினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌‌ந்து கொடிக்கு தடை விதிக்க மறு‌த்த நீதிபதி, வழக்கை வரும் ஜூன் 1 ‌ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
(மூலம் - வெப்துனியா)

1 comment:

Thilse Senthil said...

ayya pasupathi pandiyan avarkale..
nalla irukura samukathula yen theva illama problem panringa..
unga velaiya parthudu ponga..