Saturday, August 14, 2010

தேவேந்திரகுல வேளாளர் நெல்லையில் உண்ணாவிரதம்

தேவேந்திரகுல வேளாளர் நெல்லையில் உண்ணாவிரதம்

மள்ளர் இலக்கியக்கழகம் நெல்லையில் உண்ணாவிரதம்

நெல்லையில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மள்ளர் இலக்கியக் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மானூர், பள்ளமடை குளங்கள், ஓட்டப்பிடாரம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைப்பது, உட்பிரிவுகளை இணைத்து ஒரே இனமாக தேவேந்திரகுல வேளாளர் என அறிவிப்பது, சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. மாநில அமைப்புச்செயலாளர் செல்லையா பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ் வரவேற்றார். தலைமை செயலாளர் நல்லுச்சாமி, மாநில பொருளாளர் பழனிவேல்ராஜன், செய்தித்தொடர்பாளர் ரத்தின மாணிக்கம், இளைஞரணி மாநிலச்செயலாளர் அர்ஜூன், மாநில துணை பொருளாளர் அழகர், நிர்வாகிகள் சுதாகர், சுபாஷ், பாலா, கண்ணன், முத்துக்குமார், தூத்துக்குட மாவட்ட அவைத்தலைவர் அரிகிருஷ்ண தேவேந்திரர், மேற்கு மாவட்டச்செயலாளர் தண்டாயுதபாணி, ஒருங்கிணைப்பாளர் முருகையா பாண்டியன் உட்பட பலர் பேசினர்.

நிறுவனத்தலைவர் சுப. அண்ணாமலை கூறும்போது, “தேவேந்திரகுல வேளாளர் மக்கள் மேம்பாட்டிற்கு பாடுபட்டு வருகிறோம். மானூர், பள்ளமடை குளங்கள், ஓட்டப்பிடாரம் பகுதிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தனிக்கால்வாய் அமைக்க 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

No comments: