Thursday, September 15, 2011

அனைத்து துன்ப பூட்டுகளின் திறவு கோல் அரசியல் அதிகாரமே

செப்டம்பர் 11 தியாகி இம்மானுவேல் சேகரனாரின் குரு பூஜை நாளன்று பரமக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு, கலவரமானது திட்டமிட்ட சதி செயல் என்பதினை அனைவருமே உணர்கின்றோம். இந்நிலையில் நம் தேவேந்திர சொந்தங்களில் பலரும் பல நிலையில் தங்களது எதிர்ப்பையும் ஆதங்கத்தையும் காட்டுகின்றனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் நிலைப்பாடு என்ன? பகுஜன் சமாஜ் கட்சி இக்கொடுற கொலை வெறி தாக்குதலுக்கு எதிராக என்ன செய்ய போகிறது ? என்றெல்லாம் பலரும் கேள்வியாக தொலை பேசியில் பி எஸ் பி மாநில பொது செயலாளர் திரு ஜீவன் குமார் அவர்களிடம் கேட்கிறீர்கள்..

ஏற்கனவே பி எஸ் பி நிலைப்பாடு என்ன என்பதையும் தேவேந்திரர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கடந்த தேர்தலின் பொது தெளிவாக மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் துண்டறிக்கைகள் வழியாக சொல்லியிருந்தோம்.

அதாவது கடந்த 2006 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களித்தவர்களும் இனி வரவிருக்கும் 2011 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க தயாராக இருப்பவர்களும் தங்களைத் தாங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள் என்று செய்தி கொடுக்கப்பட்டது. காரணம் திராவிட கட்சிகள் அனைத்துமே தேவேந்திரர்களை மேலும் மேலும் அடித்து நொறுக்கி சின்ன பின்னாமாக்கும் வேலையைத்தான் செய்யும்.
அப்பொழுது இச்செய்தியினை கண்டதும் பலர் கொதித்து சூடாக பேசினர். குறிப்பாக திராவிட கட்சிகளிடம் ஒரு சில நாற்காலிக்காக சமூகத்தை அடகு வைத்த லெட்டர் பேடு கட்சிகளிடம், நாம் கைக்கூலிகளாக இருக்கிறோம் என தெரியாமல் கைக்கூலியாக இருப்பவர்கள்தான் மிக காரசாரமாக பேசினர்.
இப்பொது என்னவாயிற்று?
திட்டமிட்டபடியே தேவேந்திரர்கள் மீதான கொலை வெறி தாக்குதலை காக்கி சட்டை கயவாளிகள் மூலம் நடத்திவிட்டது பார்ப்பனிய பயங்கரவாதியான ஜெயலலிதாவின் அ தி மு க அரசு.
கொஞ்சம் கூட சுய சிந்தனையே இல்லாத கல்வியாளர்கள் சிலர் மக்களை, ஒரு சீட்டுக்கும் ரெண்டு சீட்டுக்கும் பிச்சை எடுக்கும் கட்சிகளுக்கு பின்னால் இழுத்து செல்லும் முட்டாள் தனமான செயல்கள்தான் தொடர் அவலத்திற்கும் இழப்பிற்கும் காரணிகளாக அமைகின்றது.

உங்களது வாக்கின் வலிமையை நீங்கள் உணராத வரை இது போன்ற தொடர்ச்சியான துன்பங்களுக்கும் அனைத்துவிதமான உரிமை மீறல்களுக்கும் நமக்கு நாமேதான் பொறுப்பாக முடியும். ஏனென்றால் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வோட்டு போட்டுவிட்டு ஜெயலலிதா வெற்றி என்ற செய்தி கேட்டதுமே ஜெயலலிதாவிற்கு வோட்டு போட்ட ஒவ்வொரு தேவேந்திரனும் கிராமத்திலுள்ள கோவில் வளாகத்தில், மரத்தடியில் டீ கடையில் பஸ் ஸ்டாப்பில் நமது தாய் குலமும் இளசுகளும் "இந்த செயலலிதா முண்ட வந்துட்டா, நம்ம மக்க என்னென அல்லோலப்பட போறங்கனு தெரியலையே" என புலம்பிய நமது தாய்மார்களின் ஆழ் மனதிலிருந்து வந்த சத்தியம் உள்ள வார்த்தையினுடைய குரலொலி குறைவதற்கு முன்பாகவே சண்டாள சிறுக்கி மவ தன்னுடைய பார்ப்பனிய பயங்கரவாத ஆட்டத்தை அரங்கேற்றி விட்டாள்.

அடிக்கடி திரு ஜீவன் குமார் அவர்கள் அனைத்து அரசியல் பயிற்சி பட்டறைகளிலும் கூறுவார், “A Single Intellectual criminal can destroy the whole society’s self respect” .

ஒரு தனி மனிதன் சுயநல நோக்கோடு சமூகத்தை அடகு வைத்ததினால் இன்று நம் சமூகத்தின் மாண்பு என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது. ராமநாதபுரம் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் உள்ள நம் சொந்தங்கள் தங்களது இருப்பிடத்தை காலி செய்து காடுகளில் ஒளிந்து வாழுகின்ற நிலைக்கு காரணம் வேறு யாரையும் கை நீட்டி குற்றம் சொல்வதற்கு தகுதியில்லாத நபராக நீங்கள் இருக்கின்றீர்கள்.

புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வது போல "அனைத்து துன்ப பூட்டுகளின் திறவு கோல் அரசியல் அதிகாரமே" என்ற வார்த்தைக்கு இணங்க, அரசியல் விழிப்புணர்வு வராத வரை சமூக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

உத்திரப் பிரதேசத்தில் அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கிருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் ஐம்பது லட்சத்திற்கும் மேல் கூடினாலும் ஏன் அவர்களுக்கு எந்த அடக்குமுறையும் நடைபெறவில்லை என்றால் அங்குள்ள ஒவ்வொரு தனி நபரும் கூடுகின்ற கூட்டமானது அரசியல் கூட்டமாக இருக்கின்றது.
நாம் ஒரு ஒழுங்கை படிக்க வேண்டும் என்றால் நாம் நமக்கான அரசியல் பேரியக்கத்தில் இருந்தாலே போதும்.

தன்னுடைய தொண்டர்கள் எவ்வளோ தூரத்திற்கு ஒழுங்கீனமாக
செயல்படுகிறார்களோ அவ்ளோ தூரத்திற்கு சாதிய தலைவர்கள் விலை போவதற்கும் கைக்கூலி ஆவதற்கு வாய்ப்பாகவும் வசதியாகவும் அமைந்து விடுகின்றது.

நமது ஓட்டில் நாமே நம்மை ஆள வேண்டுமா? இல்லை நமது ஓட்டில் பிறர் நம்மை நம்மை ஆள வேண்டுமா? தந்தை கன்சிராம் அவர்களின் இந்த உயிரோட்டமான வார்த்தை அங்கிருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்களை ஆளுகிற வகுப்பாக உயர செய்தது.
நாம் நமது ஓட்டில் நம்மை நாமே ஆள வேண்டுமென்ற கோபத்தோடு இந்நொடி முதலே செயல் பட தொடங்குவோம்.

இப்படிக்கு,

தி மு க, அ தி மு க-விற்கு வாக்களித்த கைக்கூலிகள் மீது கடுங் கோபத்துடன்,
அ. லூயிஸ்.

No comments: